fbpx
Connect with us

Cinemapettai

கண்ணெதிரே தீக்குளித்த அம்மா.. வேதனையில் துடித்த நடிகர் நாஞ்சில் விஜயன்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கண்ணெதிரே தீக்குளித்த அம்மா.. வேதனையில் துடித்த நடிகர் நாஞ்சில் விஜயன்

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிய சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் எப்பொழுதுமே பெண் வேடமிட்டு அனைவரையும் சிரிக்க வைப்பவர் நாஞ்சில் விஜயன். அதன் பிறகு அதே தொலைக்காட்சியில் தொடர்ந்து கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளிலும் காமெடி செய்கிறார்.

இவரது பெண் வேடத்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தன் திறமையான நடிப்பால் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் கால் தடம் பதித்தவர். இன்று பலராலும் பாராட்டப்படும் நாஞ்சில் விஜயனின் வாழ்க்கையில் மிகப்பெரிய சோகம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம். நாகர்கோவிலை இருப்பிடமாகக் கொண்ட நாஞ்சில் விஜயன் தனது சிறுவயதில் இவரது தந்தையாரின் குடியால் மனதுடைந்த தாய், இவரின் கண்முன்னே தீக்குளித்து கொண்டார். பிறகு தந்தை அவர் வழியே சென்ற பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார்.

படித்து முடித்த பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த விஜயன், கலக்கப்போவது யாரு சீசனில் கலந்து கொண்டு முதல் சுற்றிலேயே வெளியேறினார். இருந்தும் அந்த நிகழ்ச்சியின் டைரக்டர் தாமஷிடம் நல்ல பெயரை பெற்று, நடிப்பு திறமையால் தற்போது விஜய் டி.வி-யின் அழிக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருக்கிறார்.

கஷ்டப்பட்டா பலன் கிடைக்கும் பாஸ்.!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top