Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்.. சூட்டிங் ஸ்பாட்டில் பரிதாபம்
பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி குமுளி அருகே நடைபெற்ற பட சூட்டிங்கின்போது மாரடைப்பால் இறந்தார். இதனைக் கேட்ட அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கிருஷ்ணமூர்த்தி, நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். விஜயகாந்த் நடித்த தவசி என்ற படத்தில் நடிகர் வடிவேலுவை சோதிக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த காட்சியில் அவர் கூறும் எக்ஸ்க்யூஸ் மீ இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா? என்ற வசனம் தமிழ் சினிமாவில் யாரும் மறக்க முடியாத நகைச்சுவை காட்சியாக அமைந்தது.
சிறந்த குணச்சித்திர நடிகராகவும் நான் கடவுள் படத்தில் வலம் வந்திருப்பார். வடிவேலுவுடன் சிறந்த நண்பராக விளங்கியவர். புகழ்பெற்ற பிரண்ட்ஸ் படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பு சில காரணங்களால் நழுவி விட்டது.
தன்னுடைய பெயரை ரமேஷ் கண்ணாவின் கேரக்டருக்கு கிருஷ்ணமூர்த்தி என பெயர் சூட்டி தனது நன்றிக்கடனை செலுத்தியதாக வடிவேலுவை பற்றி பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
இந்நிலையில் கேரள மாநிலம் குமுளி அருகே நடந்த படப்பிடிப்பில் மாரடைப்பின் காரணமாக இன்று காலை உயிர் நீத்தார். இந்த செய்தியை கேட்ட திரையுலகம் மிகுந்த சோகத்தில் உள்ளது.
