fbpx
Connect with us

Cinemapettai

தலைவிரித்தாடும் காமெடியன்கள் பஞ்சம்.. சிரிப்பாய் சிரிக்கும் சினிமா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தலைவிரித்தாடும் காமெடியன்கள் பஞ்சம்.. சிரிப்பாய் சிரிக்கும் சினிமா

சினிமாவில் காமெடியன்களுக்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ தமிழ் சினிமாவின் நிலைமை காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது என்பது உண்மை. இதற்கு காரணம் சில இயக்குனர்கள்தான். ஒரு காலத்தில் என் எஸ் கிருஷ்ணன், தங்கவேல் காமெடி என அங்குலாம்  போக வேண்டாம். ஏனென்றால் அன்றைய காலகட்டம் வேறு, இன்றைய காலகட்டம் வேறு அவர்கள் சமூகத்திற்காக நிறைய விஷயங்களை காமெடியாக வெளியிட்டார்கள் புகழ் பெற்றார்கள்.

அதன்பின் 80s, 90s கால கட்டங்களில் உள்ள காமெடி நிலை பற்றி கண்டிப்பாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன. 80s, 90s கால கட்டங்களில் கலக்கியவர்கள் கவுண்டமணி, செந்தில். இவர்கள் காமெடி மட்டுமல்லாமல் கதையில் நடிகர்களுடன் சேர்ந்து பயணம் செய்வார்கள். கதைக்கு தேவைப்படும் இடத்தில் காமெடிகள் அமைத்துக் கொள்வார்கள். மக்களிடையே அவர்கள் காமெடி அனைத்தும் பெரும் வரவேற்பு பெற்றது.

அதற்கு முக்கிய காரணம் அந்தப் படங்களின் இயக்குனர்கள். அவர்கள் கதைக்கு தேவையான காமெடியை சேர்த்து கொடுத்தார்கள், அதனால் ரசித்தார்கள். கவுண்டமணி, செந்தில், வடிவேலு சாதித்தார்கள். ஏன் சந்தானம் வரை கூட ஏற்றுக் கொள்ளலாம் . ஆனால் அதன்பின் வந்த காமெடியன்களின் நிலைதான் பெரும் காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது.

ஜென்டில்மேன் படத்திற்கு மேல் ஒரு உதாரணமே தேவை இல்லை. அவளோ பெரிய மிகவும் சீரியஸ் ஆன படத்தில் ஹீரோ கூடவே சேர்ந்து கவுண்டமணி செய்யும் காமெடிக்காகவே ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்தார்கள். அதுதான் இயக்குனரின் திறமை. காமெடி நடிகர்களின் சிந்தனை.

படங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் தனியாக காமெடி அமைத்து சிறிது நேரம் சிரிக்க வைக்கறேன் என்று மக்களை சோதித்து வருகின்றனர் நமது புது காமெடியன்கள். அதற்கு காரணம் இயக்குனர்கள்தான். இயக்குனர்கள் படத்தின் கதை நன்றாக இருக்க வேண்டும் அதில்  ஹீரோவோடும் கதையோடும் சேர்ந்தே சில காமெடிகள் இருந்தாலே போதும் நம் ரசிகர்கள் ரசிப்பார்கள்.

சூரி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் போன்றவர்களும் நல்ல காமெடியன்கள் தான் ஆனால் பெரிய அளவில் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை. ஆனால் பணம் மட்டும் சேர்க்க முடிகிறது. சரி, முழு காமெடி படமாக எடுத்து வெளியிட்டாலும் அதிலும் சிக்கல். அந்த படங்களில் கூட கதை, திரைக்கதை நன்றாக இல்லை என்றால் தயாரிப்பாளர்கள் பாடு திண்டாட்டம்தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top