Tamil Cinema News | சினிமா செய்திகள்
செத்து செத்து விளையாடுவோமா முத்துகாளையின் தற்போதைய நிலை? காரணம் குடி
வடிவேலு காமெடியின் முக்கிய காரணம் அவரது கூட நடிக்கும் சக நடிகர்களும்தான். அல்வா வாசு, முத்துகாளை, சிங்கமுத்து என பல நடிகர்கள் இருக்கிறார்கள். அதனில் அல்வா வாசு குடியின் காரணமாக சமீபத்தில் இறந்து போனார். தற்போழுது வடிவேலு சிறு சிறு படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவர் நினைத்தால் பல படங்களில் நடிக்க முடியும்.
ஆனால் முத்துகாளை சினிமா பக்கமே காணாமல் போய் விட்டார். அல்வா வாசுவை தொடர்ந்து ஐவரும் நல்ல குடிக்கு அடிமை மாதிரி இருந்தார். இதனை பார்த்த வடிவேலு இப்படியே தொடர்ந்தால் நீயும் அல்வா வாசுவை போலவே சீக்கிரம் போய்டுவ என கூறி இருக்கிறார்.

muthukaalai
இவளோ தூரம் வடிவேலு சொல்லி கேட்காமல் இருப்பாரா? அவர் கூறியதில் இருந்து இவருக்கும் பயம் வந்துவிட்டதாம், அதனால் இனி குடிக்கவே கூடாது என முடிவு எடுத்துள்ளார் என ஒரு பேட்டியில் கூறி உள்ளார் முத்துகாளை. மேலும் மனைவி, குழந்தைகளை கவனிக்காமல் இருந்த முத்துக்காளை இப்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது அவர் பாலிவுட்டில் மேரே இந்தியா என்ற படத்தில் நடிக்கிறாராம். அப்படம் தமிழில் நம் இந்தியா என்ற பெயரிலும் உருவாகி வருகிறதாம். வடிவேலு செய்த பெரிய விஷயம் இதுதான்.
