Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரேணிகுண்டா படத்தில் நடித்த பிரபலம் காலமானார்.. சோகத்தில் இருக்கும் திரையுலகம்

தமிழ் சினிமாவில் ரேணிகுண்டா, பில்லா2, கண்ணே கலைமானே, தென்மேற்கு பருவக்காற்று, போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக கார்த்திக் என்கிற தீப்பெட்டி கணேசன்  உடல்நிலை குறைவால் காலமானார்

. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். ஏற்கனவே மாற்றுத்திறனாளியான தீப்பெட்டி கணேசன் ஊரடங்கு காலத்தில் கடும் வறுமையால் பாதிக்கப்பட்டதால், தனக்கு உதவி செய்யுமாறு நடிகர் அஜித்துக்கு வேண்டுகோள் விடுத்த வீடியோவும் அண்மையில் வெளியானது.

அதன்பின் அஜீத்தின் மேனேஜர் இதுகுறித்து அஜித்திடம் பேசுவதாகவும் உறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு நடிகர் ராகவா லாரன்ஸ், பாடலாசிரியர் சினேகன், நடிகர் சங்கத்தில் சங்கத்தின் தரப்பிலிருந்து விஷால் ஆகியோர் கணேசனுக்கு உதவி செய்ய முன்வந்தனர்.

dir-seenu-twit

dir-seenu-twit

இருப்பினும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு கொண்டிருந்த தீப்பெட்டி கணேசன் திடீரென்று இன்று காலமானது அவருடைய ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இன்று தற்போது இவருடைய மரணத்திற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் மக்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
To Top