புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

ஊழலை ஒழிக்க வந்துட்டு மக்களை திசை திருப்பும் விஷக் கிருமி.. கமல்ஹாசனை வெளுத்து வாங்கிய பிரபலம்!

Kamalhaasan: தமிழக அரசியலில் திராவிட கட்சிகள் இருந்தாலும் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருபெரும் அரசியல் தலைவர்கள் மறைந்த பின் தமிழ்நாட்டில் அரசியலில் வெற்றிடம் நிலவுவதாக பலரும் கருத்துகள் கூறினர். எனவே அதுவரை சினிமாவில் கோலோட்சிக் கொண்டிருந்த கமல்ஹாசன், இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு அரசியலில் களமிறங்கப் போவதாக அறிவித்தார்.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தமிழக மக்களிடம் ஓட்டு வங்கியில் புதிதாக வேறு ஒரு கட்சி செல்வாக்கு செலுத்தி, இவர்களைத்தாண்டி வர முடியுமா என்று கேள்வி எழுந்தபோது, தன்னால் முடியும் என்று நினைத்து, கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார்.

கமல் கட்சியின் பெயர், அக்கட்சியின் சின்னம், அவரது பேச்சுகள் இதெல்லாம் எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனக்கிருக்கும் பெரிய ரசிகர்கள் வட்டம், அதைத்தாண்டி, இத்தனை ஆண்டுகள் ரசிகர் மன்றத்தின் மூலம் செய்த நலப்பணிகள் இதெல்லாம் அவரது பிம்பத்தை மக்களிடையே பெரிதுபடுத்தியது.

ஊடகங்களும் மக்கள் நீதி மய்யத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி, அவரது கட்சிக்கு பப்ளிசிட்டி கொடுத்தன. ஆரம்பத்தில் திராவிட கட்சிகளின் ஊழல்களை எதிர்த்துப் பேசி, டிவியில் தோன்றி டார்ச் லைட் மூலம் டிவியை உடைத்து தனக்குள்ள கோபத்தை மக்களின் கோபமாக வெளிக்காட்டியவர், போகப் போக தனித்து அரசியல் கட்சி செய்ய முடியாது என்பதை கடந்த தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு, வானதி சீனிவாசனிடம் தோற்றபோது உணர்த்திருப்பார்.

சினிமா வேறு, அரசியல் வேறு என்று உலக நாயகன் எதார்த்தத்தை உணர்ந்து கொண்ட சில வருடங்களா ஆயினும் தற்போது அவர் காங்கிரஸ்- திமுக கூட்டணியோடு இணைந்து பயணித்து வருகிறார். ஆரம்பத்தில் அவர் விமர்சித்த கட்சிப் பிரமுகரே அவரது படங்களுக்கும் விநியோகஸ்தராகி, படங்களையும் தயாரித்தார்.

எனவே ஊழலுக்கு எதிராகப் போராடிய இந்தியன் தாத்தாகவே பார்க்கப்பட்ட கமல், திராவிட கட்சிகளில் பிடியில் சிக்கிக் கொண்டார் என பலரும் விமர்சித்த நிலையில், அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை என்றாலும் சமீபத்தில் தான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி என்று அவரே மேடையில் கூறி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதற்கு அவர் மய்யம் என்ற தவறான கொள்கைதான் காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் கமல் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கமலை கடுமையான விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கமல் திராவிட சிந்தாந்தத்தை அழிக்க வந்தவர். அவரிடம் சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் உருவக் கேலி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, அப்புறம் பேசலாம் என்று கூறினார் என்றால் நீங்கள் என்ன அரசியல்வாதின்னு கேட்கிறேன்.

‘தாலிக்கு லஞ்சம் கொடுக்கிறார்கள் இதுபற்றி எல்லாம் கூறுகிறாரே, கமலுக்கு அறிவு சுத்தமா இருக்கிறதா? இல்லையா என்று புரியவில்லை. கமல் முக்கியமான பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் விஷக் கிருமி, அவர் நடத்தும் அரசியல் நிகழ்ச்சியின் மேடை சினிமா செட்டை விட பிரமாண்டமாக இருக்கும். இதற்கு பணம் எங்கிருந்து வரும்?’ என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -spot_img

Trending News