Tamil Nadu | தமிழ் நாடு
தமிழகத்திற்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர்.. காவிரி தண்ணீர் உறுதி.. வரலாற்றை உடைத்தார் குமாரசாமி
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி காவேரி ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு நீரைத் திறந்துவிட உள்ளதாக தெரிவித்துள்ளார். காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு வருமா ?
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் அகலயா சேர்ந்தவர் சுரேஷ். இந்த விவசாயி தன்னுடைய இறுதி சடங்கில் முதலமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் என்று ஒரு வீடியோவில் பேசிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை அறிந்த முதலமைச்சர் அவரது வீட்டிற்கு சென்றார். இறுதி சடங்கில் கலந்து கொண்டு பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் நமது நீரை நாம் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளோம். மேலும் காவிரி தண்ணீரை யார் எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பதை காவிரி ஆணையம் தான் முடிவு செய்கிறது. அதனால் காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டியது நமது கடமை என தெரிவித்துள்ளார்.
இவர் கூறியதை பார்க்கும்போது விரைவில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழகம் தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறையாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த சமயத்தில் தண்ணீர் திறந்து விட்டால் நல்லது என பலரும் கூறி வருகின்றனர்.
