குக் வித் கோமாளியில் 5 வருஷமாக கலக்கிய கோமாளி.. பிக் பாஸ்க்குள் அனுப்பி வேடிக்கை பார்க்க போகும் விஜய் டிவி

Vijay TV Bigg Boss 8: விஜய் டிவி சேனலுக்கு கொஞ்சம் நேரம் சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு நேரத்தில் ரியாலிட்டி ஷோ மற்றும் மக்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் பல நிகழ்ச்சிகளை அசால்டாக நடத்தி மக்களின் பொழுதுபோக்கு சேனலாக இடம் பிடித்தது. ஆனால் போகப் போக விஜய் டிவிக்கு டிஆர்பி ரேட்டிங் தான் முக்கியம் என்பதற்கு ஏற்ற மாதிரி காய் நகர்த்தி வருகிறது.

இதனால் மக்களிடம் இருந்து வெறுப்புகளை சம்பாதித்துக் கொண்டு வரும் விஜய் டிவி கடந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப்புக்கு அநியாயமாக கொடுத்த ரெட் கார்டு மூலம் ஒட்டுமொத்த பெயரையும் கெடுத்துக்கொண்டது. அதே மாதிரி இந்த வருடம் குக் வித் கோமாளியில் பிரியங்கா மற்றும் மணிமேகலையின் பஞ்சாயத்து பூதகரமாக வெடித்து வரும் நிலையில் விஜய் டிவி பிரியங்காவுக்கு மட்டும் ஆதரவு கொடுத்ததால் குக் வித் கோமாளி சீசனையும் மக்கள் வெறுத்து விட்டார்கள்.

முழுக்க முழுக்க என்டர்டைன்மென்ட் பண்ண போகும் கோமாளி

அதனால் தற்போது இது எல்லாத்தையும் சரி செய்யும் விதமாக வருகிற பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை குதூகலமாக கொண்டாடி மக்களை எப்படியாவது சந்தோஷப்படுத்தி விட வேண்டும் என்று போட்டியாளர்களை தேர்வு செய்து வருகிறார்கள். அந்த வகையில் கிட்டத்தட்ட 18 போட்டியாளர்களை தேர்வு செய்த நிலையில் வைல்ட் கார்டு என்டரி கொடுக்கும் விதமாக குக் வித் கோமாளி சீசனில் இதுவரை ஐந்து வருடமாக கோமாளியாக வந்த ஒரு போட்டியாளர் பங்கு பெற போகிறார்.

இவர் ஏற்கனவே விஜய் டிவியில் நடந்த பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களை அதிக அளவில் என்டர்டைன்மென்ட் செய்திருக்கிறார். இவருடைய பேச்சும் நடவடிக்கையும் மக்களை கவர்ந்ததால் இவர் ஒரு நிஜமான வேடிக்கை காட்டும் கோமாளியாக மக்கள் மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அப்படிப்பட்ட இவரை பிக் பாஸ்க்குள் அனுப்பி வைத்து சம்பவத்தை செய்யப்போகிறது.

இந்த போட்டியாளர் வேறு யாருமில்லை வெள்ளி திரைகளிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து விஜய் டிவியை விட்டு போக மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும் சுனிதா தான். அந்த வகையில் இவர் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிலும் இவரை வைத்து பிரச்சினை வருகிறதோ இல்லையோ இவர் பண்ணுகிற காமெடியும் அட்ராசிட்டியும் மக்களை சிரிக்க வைக்கப் போகிறது என்பது உறுதியாக தெரிகிறது.

விஜய் டிவி சேனலுக்கு தற்போது சூனியம் வைத்தது போல் தொடர்ந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அதனால் எல்லாத்தையும் போக்கும் விதமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை மக்களுக்கு பிடித்த மாதிரி போட்டியாளர்களுக்கு அதிக அளவில் டாஸ்க் கொடுத்து எப்படியாவது மக்கள் மனதை வென்று விட வேண்டும் என்று பக்கவாக பிளான் பண்ணி வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் வருகிற அக்டோபர் ஆறாம் தேதி முதல் 100 நாள் வரை தரமான சம்பவம் காத்துக் கொண்டிருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News