கோமாளி ரீமேக் உரிமையை கை பற்றிய போனி கபூர். ஹிந்தியில் ஹீரோ யார் தெரியுமா ?

ஐசரி கணேஷ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் தான் கோமாளி. நல்ல காமெடி அதே சமயம் இன்றைய அவசர டெக்னலாஜி உலகில் நெக்ஸ்ட் ஜென் இளசுகளுக்கு தேவையான மெஸேஜ் என கலக்கல் காம்போ தான் இப்படம்.

இப்படத்தின் ரிமேக் உரிமையை போனி கபூர் வாங்கியுள்ளார். மேலும் படத்தில் ஹீரோவாக அவரது மகன் அர்ஜுன் கபூர் தான் நடிக்கிறார்.

Arjun & Boney Kapoor

ட்விட்டரில் ஜெயம் ரவிக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி, தன் நன்றிகளை பதிவிட்டார் போனி கபூர்.

அர்ஜுன் கபூரும் தனி ஒருவன் தொடங்கி கோமாளி வரை நீங்கள் என் இன்ஸபிரேஷன், உங்களின் படத்திற்கு பெருமை சேர்ப்போம், ஹிந்தியிலும் அந்த மகிழ்ச்சியை பரவ விடுவோம் என ஜெயம் ரவிக்கு பதில் தட்டியுள்ளார்.

Leave a Comment