Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
கோமாளி பட இயக்குனரின் அடுத்த ப்ராஜெக்டில் ஹீரோ யார் தெரியுமா ?
கோமாளி சென்ற வருடம் வெளியாகி வைரல் ஹிட் ஆன படம். 16 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து மீண்டு வரும் நபராக ஜெயம் ரவி நடித்திருப்பார். வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் தயரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இப்படத்தை இயக்கி இருந்தார். கதை திருட்டு சம்பவத்தில் சிக்கி பின்னர் ரிலீசானது குறிப்பிடத்தக்கது. படத்தின் போஸ்டர்கள் அனைத்துமே நல்ல ரீச் பெற்றது இப்படம் ஹிட் அடிக்க முக்கிய காரணம்.
கோமாளி படம் வெளியாகி ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. எனினும் பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த படத்தை அறிவிக்காமல் இருக்கிறார். இதனை பற்றி ரசிகர்கள் தொடர்ந்து ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் தான் அவர் தனுஷ் உடன் இணைவதாக கிசு கிசுக்கப்படுகிறது.
நடிகர் தனுஷ் ‘ஜகமே தந்திரம்’, ‘கர்ணன்’ மற்றும் ஹிந்தியில் ‘அத்ரங்கி ரே’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் . இந்தப் படங்களை முடித்துவிட்டு இயக்குநர் கார்த்திக் நரேன், ராம்குமார் ஆகியோர் இயக்கவுள்ள படங்களில் நடிக்க உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. இதுமட்டுமன்றி அவரே இயக்கிய படம் பாதியில் உள்ளது, அண்ணன் செல்வராகவன் வேறு ஸ்க்ரிப்ட் ரெடி செய்து வருகிறார்.

comali director pradeep ranganthan with jayam ravi
சமீபத்தில் கோமாளி படத்தை பார்த்து வியந்த நடிகர் தனுஷ் பிரதீப் ரங்கநாதனை அழைத்து தனக்கு தகுந்த கதை எதாவது இருக்கிறதா என கேட்டாராம். இயக்குனர் பிரதீப் ஒன் லயன் கதையைசொல்ல, தனுஷுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அதனை டெவலப் செய்து கொண்டு வரும் படி தனுஷ் பிரதீப் ரங்கநாதனிடம் கூறி உள்ளதாக சொல்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
சீரியஸ் படங்களாக நடித்து வரும் தனுஷ், லைட் காமெடி கலந்த பீல் குட் சினிமா நடிக்க முடிவு செய்ததே இதற்கு காரணம் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.
