Connect with us
Cinemapettai

Cinemapettai

சூர்யாவை தூக்கி சாப்பிட்ட ஜெயம் ரவி.. கோமாளி பலசாலி

comali-boxoffice-breaks-record

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவை தூக்கி சாப்பிட்ட ஜெயம் ரவி.. கோமாளி பலசாலி

ஜெயம் ரவி காஜல் அகர்வால் சம்யுக்தா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த படம் கோமாளி. இப்படத்தில் காமெடியனாக யோகி பாபு நடித்திருந்தார். இந்த படத்தின் அறிமுக இயக்குநர் பிரதீப் டைரக்ட் செய்திருந்தார். இசை ஹிட் ஹாப் தமிழா. வேல்ஸ் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்திருந்தனர்.

கோமாளி படம் தமிழகத்தில் வசூல் வேட்டை ஆடி வருகிறது. படம் வெளிவந்த மூன்று வாரங்கள் ஆகியும் படத்தின் வசூல் அமோகமாக இருக்கிறது. தற்போது வரை தமிழகத்தில் மட்டும் 34 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இது சூர்யாவின் என் ஜி கே படத்தை விடவும் அதிகமாகும். இந்த வருட டாப் 5 வசூலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஜெயம் ரவியின் முந்தைய படமான தனி ஒருவன் வசூலை முறியடிக்க இன்னும் சில கோடிகளை தேவையாக இருக்கிறது. பின்வரும் நாட்களில் அதையும் எளிதாக முடித்து விடுவேன் என்று கோமாளி அடம் பிடிக்கிறது.

கடந்த சில படங்களாக சூர்யா ஹிட் கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.இப்பொழுது ஜெயம்ரவியின் படம் சூர்யா படத்தை விட அதிகமாக வசூல் செய்ததால் சூர்யாவின் மார்க்கெட்டிங் நிலைமை கேள்விக் குறியாகியுள்ளது.

ஹம்.. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன தான் நடக்கும்னு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top