fbpx
Connect with us

Cinemapettai

கலர்ஸ் உடல் எடை குறைப்பு மையம் மீது வரி ஏய்ப்பு புகார்.. 50 இடங்களில் ரெய்டு

India | இந்தியா

கலர்ஸ் உடல் எடை குறைப்பு மையம் மீது வரி ஏய்ப்பு புகார்.. 50 இடங்களில் ரெய்டு

வரி ஏய்ப்பு புகாரையடுத்து உடல் எடை குறைப்பு நிறுவனமான கலர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

உடல் எடையை குறைப்பதற்கான சிகிச்சை அளிப்பதாக கூறி கலர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், 50க்கும் மேற்பட்ட கிளைகளை அமைத்துள்ளது.

இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் ஏராளமான நடிகர், நடிகைகள் நடித்துள்ளார்கள். இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் வந்தது. இதையத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் 6 இடங்களிலும் கோவை, புதுச்சேரி, வேலூர், திருச்சி ஆகிய நகரங்களில் 8 இடங்களிலும் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top