பார்வதி தேவி வேடத்தில் நடித்து புகழ் பெற்ற  நடிகை சோனாரிகா படோரியா. இவர் தமிழில் நடிகர் கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக் நடிக்கும் இந்திரஜித் படத்தில் நடித்து வருகிறார்.

இவரது தொலைபேசிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு இளைஞரிடம் இருந்து, நான் உங்களை காதலிக்கிறேன்.உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன் என தொடர்ந்து லவ் சிம்பள் கொண்ட காதல் மெசேஜ்களை அனுப்பினான். ஆனால் சோனாரிகா படோரியா அதனை பெரிதாக பொருட்படுத்தாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் அதே இளைஞன் சோனாரிகாவிற்கு தொடர்ந்து ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ அனுப்பி உள்ளான். இது தொடர்பாக நடிகை எச்சரித்தும் அவன் தொடர்ந்து வீடியோ அனுப்பி வந்தான். இதையடுத்து குர்கான் காவல் நிலையத்தில் சோனாரிகா படோரியா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.