டிவி சீரியல்களில் பார்வதி தேவி கதாபாத்திரத்தில் நடித்த நடிகைக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்பிய கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த சோனாரிகா படோரியா என்ற நடிகை, ஹிந்தி சீரியல்களில் பார்வதி தேவி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். இது தவிர கெளதம் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “இந்திரஜித்” படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாகவும் அறிமுகமாக இருக்கிறார்.

அதிகம் படித்தவை:  இயக்குனர்களை காக்க வைகிறார பிரபல ஹீரோயின்?

கடந்த ஆண்டும் இவரது செல்போன் எண்ணுக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அந்த மெசேஜில் சோனாரிகாவை உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது போல மெசேஜ்கள் வருவது சகஜம் என்பதால் அதனை சோனாரிகா கண்டுகொள்ளவில்லை.

ஆனால் அதற்கு பின்னர் ஆபாச படங்களுடன் இதே போன்ற மெசேஜ்கள் வரத் துவங்கின. இதனைத் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட எண்ணை தனது செல்போனில் சோனாரிகா பிளாக் செய்தார். ஆனாலும் தொடர்ந்து அந்த மர்ம நபர், வெவ்வேறு எண்களில் சோனாரிகாவுக்கு மெசேஜ்கள் அனுப்பி வந்துள்ளான். இதனால் பொறுமை இழந்த சோனாரிகா, இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில் ஆபாச மெசெஜ் அனுப்பியது, கல்லூரில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் என்பது தெரியவந்துள்ளது.