fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பணத்தாசை காட்டி கல்லூரி மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல்: அதிர்ச்சியில் மக்கள்

girls-prostitute

Tamil Nadu | தமிழ் நாடு

பணத்தாசை காட்டி கல்லூரி மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல்: அதிர்ச்சியில் மக்கள்

நெல்லை மாவட்டத்தில் கல்லூரி மாணவிகளை பணத்தாசை காட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இப்பொழுதுதான் பொள்ளாச்சி சம்பவம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், மீண்டும் கல்லூரி மாணவிகளின் பிரச்சனை தலைதூக்கியுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த பீட்டர் மார்ட்டின் என்பவர் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ப்ராஜெக்ட் செய்து கொடுக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவரிடம் பிராஜெக்ட் கேட்டு வரும் மாணவிகளை “லட்சங்களில் பணம், கோடிகளில் வாழ்க்கை” என பணத்தாசை காட்டி விபச்சார வலையில் சிக்க வைத்து தொழிலதிபர்களுக்கு விருந்தாக்கி வந்துள்ளார்.

பெரும்பாலும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்த பெண்களையே குறிவைக்கும் இவன் அவர்களிடம் இது போன்ற ஆசை வார்த்தைகளை காட்டி விபச்சாரத்தில் ஈடுபடுவதை கேட்டால் திருப்தி அடைவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்.

இந்நிலையில் நட்சத்திர ஓட்டலில் ஒரு பெண்ணை இரண்டு நபர்களுக்கு விருந்தாக்க இருந்த நிலையில் ஹோட்டல் ஊழியர்கள் சந்தேகமடைந்து போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஹைடெக் விபச்சாரம் வெளியே தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் பீட்டர் அடிமை கைது செய்து விசாரித்து வரும் போலீசார் அவனிடம் இருந்து ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கைப்பற்றியுள்ளனர்.

வறுமை என்ன வேணா செய்யும் போல..

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top