செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

2000 கோடி வசூல் என்னாச்சு.. கங்குவா ரிசல்ட் இதோ.. அடுத்த பான் இந்தியா படம் எப்போது?

எல்லோரும் எதிர்பார்த்த கங்குவா நேற்று உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீசானது. இப்படம் எந்தளவு ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. வசூல் நிலவரம், பான் இந்தியா படமாக ஜொலித்ததா என்பதைப் பற்றி இதில் பார்க்கலாம்.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான படம் கங்குவா. சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, கருணாஸ், பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்பட த்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார்.

உலகம் முழுவதும் நவம்பர் 14 ஆம் தேதியான நேற்று ரிலீஸாகி பெரும் வரவேற்பு பெரும் என் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இப்பட புரமோசனில் கலந்துகட்டு, சிவா, சூர்யா, ஞானவேல் ராஜா ஆகியோர் ரூ.2000 கோடி வசூலிக்கும், இரண்டு வேடத்தில் நடித்ருக்கிறார். இப்படம் பான் இந்தியா படமாக் ஹிட்ட டிக்கும் என பேசினர்.

கங்குவா ரூ.2000 கோடி வசூலிக்குமா?

இப்படம் சொன்னபடி நேற்று வெளியாகி இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. உலகளவில் முதல் நாளில் ரூ.45 கோடி முதல் ரூ.50 கோடி வசூலித்துள்ளது. ரூ.2000 கோடி வசூலிக்கும் என கூறப்பட்ட படம் முதல் நாளில் உலகளவில் ரூ.100 கோடி வசூலித்தால்தான் அடுத்தடுத்த நாட்களில் வசூல் சூடுபிடித்து சில நாட்களில் அது 500 கோடி, 1000 கோடி என கல்லாகட்டும். அதனால் இனி வரும் நாட்களிலாவது இப்படம் மேலும் வசூலிக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் பிரமாண்ட ஓபனிங் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் அது குறைவுதான் என கூறப்படுகிறது. புரமோசனின் பேசியதற்கும், ஓவர் ஹைப் ஏற்றியதற்கும் குறைவாகத்தான் படம் இருந்தது எனவும், விஎஃப் எக்ஸ் காட்சிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். 3 டி தொழில்நுட்பத்தில் வெளியானதும் ஏமாற்றம் அளித்தாகவும், இசையில் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

எனவெ 38 மொழிகளில் 11,500 தியேட்டர்களில் ரிலீஸான பான் இந்தியா படம் இன்னும் மெருகேற்ற அவசரமாக விருந்து வைத்து இப்படி விமர்சனங்களை சந்தித்திருக்க வேண்டாமே என பலரும் கூறிவருகின்றனர். இந்தி, தெலுங்கில் வருடம் ஒரு படமாவது பான் இந்தியா படம் வெளியாகி வரும் நிலையில் தமிழில் அது அரிது.

ஏனென்றால் அதற்கு பட்ஜெட் ஒரு காரணம். அப்படியிருக்க கங்குவாவுக்கு கலவையான விமர்சனம் வெளியாகும் நிலையில், ’கங்குவா ஒரு மாஸ்டர் பீஸ், சூர்யாவின் நடிப்பு அற்புதம், இதுவரை நடித்த படங்களில் இதில் சூப்பராக நடித்திருக்கிறார். சிவாவின் இயக்கமும் அருமையாக உள்ளது’ என சூர்யா ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அடுத்த பான் இந்தியா படம்

தமிழில் கங்குவாவை அடுத்து பான் இந்தியா படமாக கமலின் தக்லைஃப் , விஜய் 69, ரஜினியின் கூலி ஆகிய படங்கள்தான் இருக்கிறது. அவை அடுத்தாண்டு தான் வெளியாகும். எனவே இப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என பொருத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

Trending News