புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கங்குவாவை தும்சம் செய்யும் அமரன்.. 19 நாட்களில் இவ்வளவு வசூலா.?

Amaran Collection : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் தான் அமரன். இந்த படம் எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் மக்களால் வரவேற்கப்பட்ட இப்போதும் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதுவும் இதில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அற்புதமாக நடித்திருக்கின்றனர்.

குறிப்பாக ஒரு ராணுவ வீரருக்கான அங்கீகாரம் அளிக்கும் படமாக அமரன் படம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் அமரன் படம் வெளியாகி கிட்டத்தட்ட 19 நாட்களைக் கடந்தும் தியேட்டரில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் சமிபத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான கங்குவா படம் நவம்பர் 14 தியேட்டரில் வெளியானது. இந்த படத்தின் ரிலீஸால் அமரன் படத்தின் வசூல் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நிலைமை அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது.

19 நாட்களில் அமரன் படம் செய்த கலெக்ஷன்

அதாவது கங்குவா படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் தியேட்டரில் 50 சதவீத கூட்டம் இருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் திரையரங்கு உரிமையாளர்கள் கங்குவா படத்திற்கு கூட்டம் வராததால் அமரன் படத்தை திரையிடவே ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அமரன் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தற்போது வரை நல்ல கலெக்ஷன் பெற்று வருகிறது. அதன்படி 19 நாட்களைக் கடந்த அமரன் படம் 300 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் கேரியரில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை அமரன் பெற்றிருக்கிறது.

இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் டான் படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் செய்திருந்தது. இப்போது அமரன் படம் 300 கோடி கிளப்பில் இணைந்து இருக்கிறது. டிசம்பர் மாதம் அமரன் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் அதுவரை நல்ல கலெக்ஷனை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது ‌

- Advertisement -

Trending News