fbpx
Connect with us

Cinemapettai

கோயம்புத்தூர் காதலர்களுக்கு சந்தோசமான செய்தி.. மற்ற மாவட்டங்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்

Tamil Nadu | தமிழ் நாடு

கோயம்புத்தூர் காதலர்களுக்கு சந்தோசமான செய்தி.. மற்ற மாவட்டங்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்

சில மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூரின் முக்கிய பகுதியில் ஆண் மற்றும் பெண் இருவரும் ஒரே அறையில் லிவிங் டுகெதர் என்ற முறையில் தங்கும் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வந்தது. இதை கலாச்சார சீர்கேடு என கூறி வருமான வரித்துறையினர் மற்றும் காவல்துறையின் நடவடிக்கையால் இழுத்து மூடப்பட்டது.

இதனால் அந்த ஹோட்டல் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆண் மற்றும் பெண் இருவரும் திருமணமாகாமல் ஒரே அறையில் தங்குவது சட்டப்படி எந்தத் தவறும் இல்லை என்று கூறியுள்ளனர்.

மேலும் எவ்வித முன்னறிவிப்புமின்றி இதுபோன்ற செயல்களில் அரசு அதிகாரிகள் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது எனவும் எச்சரித்துள்ளது. இதேபோல் சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் இருவரும் சேர்ந்து வாழ்வது தவறு இல்லை என சட்டம் கொண்டு வரப்பட்டது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் விரைவில் அந்த ஹோட்டல் திறக்கப்பட இருப்பதால் கோவையில் உள்ள காதலர்களின் கூட்டம் தற்போது அலைமோத ஆரம்பித்துள்ளது. இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் இனி ஹோட்டல் மற்றும் ஹாஸ்டல்கள் உருவாக்கப்பட்டால் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

அப்ப நாம காட்டியும் கொடுக்கிறோம் கூட்டியும் குடுக்குறமா பாஸ்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top