மாணவர்களின் போராட்டத்தால் ஜல்லிக்கட்டு நடத்துவது சாத்தியமானதுடன் திரையரங்குகளில் இளநீர் விற்பனையும் தொடங்கிவிட்டது!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அயல்நாட்டு குளிர்பானங்களைப் புறக்கணிப்பது பற்றியும் இளைஞர்கள் குரல் கொடுத்தனர்.

இதனால், பல இடங்களில் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை குறைந்துள்ளது.

இந்நிலையில், கடலூரில் உள்ள ஒரு திரையரங்கம் ஒன்றில் வெளிநாட்டு குளிர் பானங்கள் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, இளநீர் மற்றும் மோர் விற்பனை தொடங்கியுள்ளது.

இது பற்றி பேசிய திரையரங்க உரிமையாளர், “விவசாயிகள் ஒவ்வொருக்கும் இதன் பலன் கிடைக்கும்.

பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்தால், விவசாயிகள் அனைவருக்கும் நன்மை அடைவார்கள்.’ என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் மாணவர்களின் போராட்டத்தின் நோக்கம் வெற்றியடைந்து வருகிறது. இதுபோல பல இடங்களில் இனி திருமணம் மற்றும் வீட்டு விசேஷங்களில் அயல்நாட்டு பானம் பயன்படுத்தமாட்டோம் என்றும் அதன் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மாணவா்களின் போராட்ட வெற்றி என்பது விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது என்று மாணவர்கள், இளைஞா்களை பாராட்டி வருகின்றனா்.