பட்ஜெட்டில் பாதி கூட வசூல் செய்யாத கோப்ரா.. விக்ரம் மார்க்கெட்டை காப்பாற்றுவாரா மணிரத்தினம்

நடிகர் விக்ரம் பெரிதாக நம்பிக் கொண்டிருந்த படம் கோப்ரா. ஏனென்றால் சமீப காலமாக விக்ரம் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் பேசப்படவில்லை. இதனால் கோப்ரா படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்து விட வேண்டும் என்ற முனைப்பில் விக்ரம் செயல்பட்ட வந்தார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் ஏழு கெட்டப்பில் கோப்ரா படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியான இப்படம் படுமோசமான விமர்சனங்களை பெற்றது.

Also Read :சூட்டிங்கே ஸ்டார்ட் ஆகல, அதுக்குள்ள பிஸ்னஸை.. விக்ரம், பா.ரஞ்சித் கூட்டணியில் நடத்த குளறுபடி

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக இப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் படம் படுதோல்வி அடைந்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ஒரு வாரத்தை கடந்தும் 45 கோடி மட்டுமே வசூல் செய்து உள்ளதாம்.

அதுமட்டுமின்றி இப்படத்தை திரையரங்குகளில் இருந்து தூக்கி விட்டனர். ஒரு டாப் நடிகரான விக்ரம் படத்திற்கு இந்த நிலைமையா என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் கோப்ரா படம் விக்ரம் படத்தின் திரை வாழ்க்கையில் படு தோல்வி அடைந்த படமாக பார்க்கப்படுகிறது.

Also Read :20 நிமிடம் குறைத்தும் கல்லா கட்ட முடியாத கோப்ரா.. 2ம் நாள் வசூலை பார்த்து அதிர்ச்சியில் விக்ரம்

இதனால் கோப்ரா படக்குழு மற்றும் விக்ரம் ரசிகர்கள் மிகப்பெரிய அப்சட்டில் உள்ளனர். இந்நிலையில் கோப்ரா படத்தால் விக்ரமின் மார்க்கெட் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்யா கரிகாலனாக விக்ரம் நடித்துள்ளார்.

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரமுக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதால் இதன் மூலம் விக்ரம் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. இப்படம் இந்த மாதம் இறுதியில் வெளியாக உள்ளது.

Also Read :பொன்னியின் செல்வன் பட விழாவிற்கு வராத ஒரே பிரபலம்.. பழிக்கு பழிதீர்த்த மணிரத்தினம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்