fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வைரலாகுது கோப்ரா விக்ரமின் வேற லெவல் கெட் அப் போட்டோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வைரலாகுது கோப்ரா விக்ரமின் வேற லெவல் கெட் அப் போட்டோ

டெமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கும் படமே கோப்ரா. சைக்காலஜிக்கல் த்ரில்லர் ஜானர் படமாம் இது. கோப்ரா படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது கதைக்கு தேவை என்பதனால் தான் இந்த படத்தில் விக்ரமுக்கு பல லுக்குகளாம் .

இப்படத்தில் ஹீரோயின்களாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் நடித்துள்ளனர். இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை 7 ஸ்க்ரீன்ஸ் லலித் குமார் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வந்துள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்பொழுது பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து படப்பிடிப்பு எடுக்கப்பட்ட விக்ரமின் வித்தியாசமான லுக் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

cobra shooting spot photo of vikram and ajay gnanamuthu

இந்த போட்டோவை விக்ரம் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து டிரண்டாக்கி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top