Tamil Cinema News | சினிமா செய்திகள்
சுற்றிலும் துப்பாக்கி, வெடிகுண்டு என படுபயங்கரமாக இருக்கும் விக்ரம்.. வைரலாகும் கோப்ரா படப்பிடிப்பு புகைப்படம்
நீண்ட நாட்களாக ஒரு பெரிய வெற்றிக்கு காத்துக் கொண்டிருக்கிறார் சீயான் விக்ரம். அந்நியன் படத்திற்கு பிறகு விக்ரம் நடித்த படங்கள் சரியாக வசூல் செய்யவில்லை என்று கருத்துக்கணிப்புகள் கூறி வருகின்றனர்.
ஐ படம் பெரிய அளவில் வசூல் செய்தாலும் அதன் பட்ஜெட் உடன் ஒப்பிட்டு பார்க்கையில் படம் பலருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இது எல்லாமே முன்னணி விநியோகஸ்தர்கள் பல பேட்டிகளில் தெரிவித்துதான்.
கடைசியாக விக்ரம் ஹரி கூட்டணியில் வந்த சாமி ஸ்கொயர் படமும் மண்ணைக் கவ்வியது. இருந்தாலும் புது புது முயற்சிகள் செய்ய எப்போதுமே தயங்கியதில்லை சீயான் விக்ரம். ஆனால் எதிர்பார்த்தபடி முடிவு இல்லை என்றால் கொஞ்சம் வருத்தம்தான்.
இந்நிலையில் எப்படியாவது ஒரு பெரிய சூப்பர் ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்பதற்காக டிமான்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் போன்ற ஹிட் படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து உடன் முதல் முறையாக கைகோர்த்துள்ளார்.
விக்ரம் 7 கெட்டப்புகளில் நடிக்கும் கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கோப்ரா படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
அந்த புகைப்படத்தை தயாரிப்பாளர் லலித்குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் விக்ரமை சுற்றி துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் என மிரட்டலாக உள்ளது. கண்டிப்பாக இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

cobra-shoot-resume
