girls_cinemapettai

இந்தியாவில் மட்டுமல்ல உலக முழுவதுமே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களை போதைப் பொருளாக பார்க்கும் சில வக்கிர புத்தி ஆசாமிகள் இருக்கும்வரை இந்த துயரம் தொடரத்தான் செய்யும்.

மேலும் இந்த மாதிரி சபலப்புத்தி ஆசாமிகளுக்கு கைகொடுக்கும் விதமாக சந்தைகளில் பல்வேறு விதமான ரகசிய கேமராக்கள் விற்பனைக்கு வருகின்றன.

அப்படி தற்போது புதியதாக ஹாங்கர் கேமரா சந்தைக்கு வந்திருக்கிறது. பெண்கள் முன்பின் தெரியாத ஊர்களில் ஏதாவது ஒரு ஹோட்டல் அல்லது விடுதியில் தங்க நேர்ந்தால், அங்கு இதுபோன்ற கோட் ஹாங்கரை கண்டால் விலகி விடுங்கள்.

அதிகம் படித்தவை:  ராம்குமார் தற்கொலை விவகாரம்: சிறைத்துறை அளித்த ஷாக் ரிப்போர்ட்!

ஏனென்றால், இதுபோன்ற கோட் ஹாங்கரில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் பெண் ஒருவர் தற்செயலாக இதுபோன்ற கோட் ஹாங்கரை தட்டி விட்டு கீழே விழுந்ததில் அதனுள் சிறிய அளவிலான கேமிரா மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதில் மிகவும் மோசமான செய்தி என்னவென்றால், இந்த கோட் ஹாங்கர் கேமிரா மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. உங்களுக்கு சந்தேகம் என்றால் கூகுள் தேடலில் கேமிரா கோட் ஹாங்கர் என்று தேடி பாருங்கள். ஏகப்பட்ட ரகசிய கேமிராக்கள் விற்பனைக்கு உள்ளதை அறிவீர்கள்.

அதிகம் படித்தவை:  ஜல்லிக்கட்டு ஜூலி , ஸ்டெர்லைட் ஆலை பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா ?

பொது இடங்களில் உள்ள ஹோட்டல், விடுதிகளில் உள்ள அறைகள், குளியலறைகள் மற்றும் ஷாப்பிங் மால்களில் உடை மாற்றும் அறைகள் போன்ற இடங்களில் பெண்கள் இதுபோன்ற ரகசிய கேமிராக்கள் இருக்கிறதா என்று பரிசோதித்து தங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.