Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையால் அதிருப்தியில் உள்ள கூட்டணி கட்சிகள்! நிலை தடுமாறும் எதிர்க்கட்சி!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து ஒவ்வொரு கட்சியினரும் மும்முரமாக செயல்பட்டு, தங்களது கட்சியை நிலைப்படுத்தி வருகின்றனர். ஆனால் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுகவிற்கும் அதனுடைய கூட்டணி கட்சிகளுக்கும் இடையே  நல்ல உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது.

ஏனென்றால் பீகார்  சட்டமன்ற தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கையில்  காங்கிரஸின் செல்வாக்கு நாடு முழுவதும் குறைந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இதனால் காங்கிரசுக்கு அதிக இடங்களை வழங்குவதில் திமுக தயக்கம் காட்டி வருவதால், காங்கிரஸ் கட்சி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.

அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பீகார் சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் முடிவுகளைக் கொண்டு திமுக காங்கிரசுக்கு குறைவான இடங்களை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே, திமுகவிடம் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியினர், பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகளைப் பார்த்து விட்டு, தற்போது திமுக எத்தனை சீட்டு கொடுத்தாலும் சரி என்ற நிலைமைக்கு வந்து விட்டார்களாம். இதனால்  வேறெங்கும் செல்ல வழியில்லாமல் திமுகவில் காங்கிரஸ் ஒட்டிக் கொண்டுள்ளது போல அரசல் புரசலாக கூறப்படுகிறது.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் உரிய மரியாதை திமுகவிலிருந்து கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் உள்ளாராம். ஏனென்றால் விசிக கட்சியின் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்ற விசிக கட்சியின் கோரிக்கையை திமுகவினர் நிராகரித்து விட்டார்களாம்.

மறுபுறம் மதிமுகவும், இடதுசாரி கட்சிகளும் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறார்களா? இல்லையா? என்ற சந்தேகமும் அரசியல் களத்தில் எழுந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் திமுகவுக்கு வேலைபார்க்கும் பிரசாந்த் கிஷோரின் ஐ- பேக் நிறுவனம் திமுக 200 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று ஆலோசனை வழங்கியதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இதன் காரணமாக கூட்டணி கட்சிகள் பெரும் அதிருப்தியில் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

dmk-cinemapettai

dmk-cinemapettai

இதனால் திமுகவின் கூட்டணி அங்கங்கள் விரைவில் மூன்றாவது அணி அமைப்பது அல்லது கமல்/ ரஜினியுடன் சேர்வது போன்றவற்றைப் பற்றி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்களாம்.

எனவே, தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், எதிர் கட்சியான திமுக, கூட்டணி கட்சியின் நிலையை மறந்து செயல்படுவது அக்கட்சிக்கு நல்லதல்ல என்று கூறுகின்றனர் அரசியல் அறிந்தவர்கள்.

Continue Reading
To Top