தனிச் சின்னம் கேட்கும் எதிர்க்கட்சியின் கூட்டணி.. மீண்டும் கிளம்பிய புது சர்ச்சை!

தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவதோடு, கட்சியின் பலத்தையும் மேம்படுத்தி வருகின்றனர்.

ஆனால் திமுக கட்சி அதற்கு எதிர் மாறாக செயல்பட்டு வருகிறது. ஏனென்றால் சட்டமன்ற தேர்தல் நடைபெற குறுகிய காலமே உள்ளது என்ற நிலையில், பொறுப்பில்லாமல் சலசலப்பில் இருந்து வருகிறது எதிர்க்கட்சி.

விஷயம் என்னவென்றால், சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திமுக கூட்டணியில் மீண்டும் தனிச் சின்னம் குறித்த சர்ச்சை பூகம்பம் போல் கிளம்பியுள்ளது.

அதாவது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் அனைத்தையும் திமுக தனது சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தி வருகிறதாம். ஏற்கனவே நடந்த தேர்தல்களிலும் விடுதலை சிறுத்தை கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளை தனது சின்னத்தில் போட்டியிட வைத்தது திமுக.

அதேபோல் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கூட மதிமுக, திமுகவின் சின்னத்தில் போட்டியிட மறுத்தது. ஆனால் கடைசி நேரத்தில் வேறு வழியின்றி திமுக சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் யாரையும் திமுக சின்னத்தில் போட்டியிட நிர்ப்பந்திக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.

இப்படி ஒரு நிலையில் திமுக ஹைதராபாத்தை சேர்ந்த ஓவைசி கட்சியை பொதுக் கூட்டத்திற்கு அழைத்து, தனது கூட்டணிக் கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் எதிர்ப்பைப் பெற்றது. இதன் காரணமாகத்தான் மனிதநேய மக்கள் கட்சி தற்போது தனிச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் தங்களுக்கு வேண்டிய சீட்டுகளை பெறுவதற்காகவே இக்கட்சிகள் தனிச் சின்னம் வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

stalin-dmk
stalin-dmk

எனவே, சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சிறிது மாதங்களே இருக்கும் நேரத்தில், எதிர்க்கட்சியில் இப்படி உள்கட்சி பூசல் நிலவி வருவதை மற்ற கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்