Tamil Cinema News | சினிமா செய்திகள்
படக்கதையை மணிரத்தினதுடன் இணைந்து எழுதி, முக்கிய ரோலிலும் நடித்துள்ள கோ-ரைட்டர் சிவா – போட்டோ உள்ளே !
செக்கச்சிவந்த வானம்
மணிரத்தினம் காதலை மையப்படுத்தாமல், முழுக்க முழுக்க ஆக்ஷனை மட்டுமே நம்பி எடுத்த படம். பிரம்மாண்ட ஒபெநிங் கொடுத்துள்ளது இப்படம். ஒருபுறம் கொரியன் தழுவல், மகாபாரதத்தின் இன்ஸ்பிரஷன் என்று பலரும் சொல்லினாலும். திரையரங்குகள் ஹவுஸ் புல்லில் தான் உள்ளது.
படத்தின் டைட்டில் கார்ட் போடும் பொழுதே கோ-ரைட்டர் சிவா ஆனந்த என்ற பெயரை யாரும் பார்க்க தவறி இருக்க மாட்டர்கள்.

ccv
சிவா ஆனந்த
நம் மானாமதுரையை சேர்ந்தவர். ரோஜா படம் பார்த்த பின் சினிமா ஆசை வந்த பலரில் இவரும் ஒருவர். வெளிநாடு வரை சென்று சினிமா கற்றவர். மணிரத்தினதுடன் உயிரே பட நாட்களில் இணைந்தவர். அலைபாயுதே படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
மாதவன் ஜோதிகாவை வைத்து அச்சம் தவிர என்ற படத்தை ஆரமபித்தார், அது 20 நாட்களில் முடங்கியது. தெலுங்கில் சித்தார்த்தை வைத்து ஒரு படம் இயக்கியுள்ளார்.

siva ananth
மணிரத்தினதுடன் நெருங்கி ட்ராவல் செய்து வரும் இவர் ஓகே கண்மணி படத்தில் துல்கரின் அண்ணனாக, காற்று வெளியிடை படத்தில் க்ரிஷ் ரெட்டி என்ற ரோலிலும் முன்பே நடித்துள்ளார்.
எனினும் தற்போது ‘செக்கச் சிவந்த வானம்’ படத்துல செழியன் கேரக்டர்தான் இவருக்கு பெரிய அடையாளத்தைத் தேடிக் கொடுத்திருக்கு. தொடர்ந்து நல்ல படங்களில் நடிப்பார், இயக்குவார் என்றும் நம்புவோமாக.

siva ananth as cheyizan in ccv
ஆல் தி பெஸ்ட் சிவா ஆனந்த் !!!
