நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார் எத்தனை படங்களில் ஒரே சமயத்தில் நடித்து வருகிறார் என்று கணக்கு வழக்கே இல்லாமல் சென்று விட்டது என்றால் அது மிகையாகாது.

அஜித்தின் ‘விசுவாசம்’, அதர்வாவின் ‘இமைக்கா நொடிகள்’, சக்ரி டோலட்டியின் ‘கொலையுதிர் காலம்’, நிவின் பாலியின் ‘லவ் ஆக்ஷன் டிராமா’, நெல்சன் திலீப்குமாரின் ‘கோலமாவு கோகிலா’, சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி’, அறிவழகன் படம், லட்சுமி மா குறும்பட இயக்குனர் சர்ஜுன் படம்.

nayanthara

கதாநாயகியை மையப்படுத்தும் படங்கள் தான் இவரின் முதல் சாய்ஸ். இடை இடையிடையே ஒரு கமேற்சியால் படம் என்றாகிவிட்டது.

கோலமாவு கோகிலா

kolamaavu kokila

அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் ரெடியாகியுள்ள படம் கோலமாவு கோகிலா. இது டார்க் திரில்லர் ஜானர் படமாம். முழுப்படத்துலயும் நயந்தாராவோட சேர்ந்து கலக்கப் போறது நம்ம நகைச்சுவை நடிகர் யோகி பாபு. இவங்களோட சரண்யா பொன்வண்ணன் அவர்களும் நடிக்கிறாங்களாம். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு . நிர்மல் எடிட்டர். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார்.

ko ko flp

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற மார்ச் 5-ஆம் தேதியும், சிங்கிள் டிராக்கை மார்ச் 8-ஆம் தேதியும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.