Connect with us
Cinemapettai

Cinemapettai

கர்ணன் படப்பிடிப்பில் துணை நடிகர் நடிகையருக்கு நடந்த கொடுமை.. கண்டும் காணாமல் இருந்த தனுஷ்

karnan-dhanush

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கர்ணன் படப்பிடிப்பில் துணை நடிகர் நடிகையருக்கு நடந்த கொடுமை.. கண்டும் காணாமல் இருந்த தனுஷ்

அசுரன் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் கர்ணன் எனும் படத்தில் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கிறார். கர்ணன் படத்தின் படப்பிடிப்புகள் நேற்று முடிவடைந்தது என தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் கர்ணன் படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கர்ணன் படத்தின் படப்பிடிப்பில் துணை நடிகர் நடிகைகளுக்கு மிகப்பெரிய கொடுமை நடந்துள்ளதாக அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

ஆனால் தனுஷ் அதை பற்றி மூச்சு விடாமல் இருந்ததுதான் தற்போது கேள்வியாக எழுந்துள்ளது. கர்ணன் படத்தில் சில காட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக துணை நடிகர் நடிகைகளை நேரடியாக தாக்க ஆரம்பித்து விட்டார்களாம். அதுமட்டுமில்லாமல் முள் வேலிக் காட்டில் செருப்பில்லாமல் நடக்க வைத்து விட்டார்களாம்.

karnan-dhanush-cinemapettai

karnan-dhanush-cinemapettai

மேலும் இதற்கான முன்னறிவிப்புகள் எதுவுமே கொடுக்காமல் படப்பிடிப்பின் போது திடீரென அப்படி நடிக்க சொன்னது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்ததாகவும், இதனால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்துள்ளனர்.

காலில் முள் குத்தி இரத்தம் ஒழுக அந்த காட்சியில் நடித்துக் கொடுத்தார்களாம். ஆனால் அந்த நடிகர் நடிகைகளுக்கு என்ன ஆனது என தனுஷ் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை என்பது தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

என்னதான் முன்னணி நடிகராக இருந்தாலும் சக நடிகர்-நடிகைகள் பத்திரமாக இருக்கிறார்களா, இல்லையா என்பதைக் கூட கேட்காமல் அப்படி என்ன ஒரு நடிகருக்கு தலைக்கனம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top