Connect with us

Tamil Nadu | தமிழ் நாடு

இளைஞர்களின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்த எடப்பாடியார்.. அதிமுகவுக்கு குவியும் ஆதரவு!

edappadi-palaniswami

வரும் ஏப்ரல் 2ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் இந்த தருணத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு தினம்தோறும் 2GB இலவச டேட்டா பனிரெண்டாம் வகுப்பை தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ், வேலைவாய்ப்பின்மையை குறைக்க, பெரிய நிறுவனங்களில் முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்பிற்கு வழிவகுத்தல் என இளைஞர்களின் மனதை தொட்டுள்ளார் எடப்பாடியார்.

அதேபோல் விவசாயிகளின் கடன் சுமையை குறைப்பதற்காக, பயிர் கடன் தள்ளுப, சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு, விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்குவது, என பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

அதேபோல் அண்மையில் கூட கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவி கடனை தள்ளுபடி செய்தல் மற்றும் ஏழை எளியவர்களின் கடன் தள்ளுபடி என எல்லோருக்கும் ஏற்ற வகையில் பல நலத் திட்டங்களை அமைக்க வேண்டும் என்பதில் கருத்தாய் செயலாற்றி வருகிறார் தமிழக முதல்வர்.

குறிப்பாக இளைஞர்களின் வேலையின்மையை கருத்தில்கொண்டு வேலைவாய்ப்பு முகாம்களை அமைத்து, அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறார் தமிழக முதல்வர்.

எனவே திறமையான ஆளுமையினாலும், அறிவிப்பினாலும் பலதரப்பட்ட மக்களை தன்வசம் ஈர்த்த தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள்,  இளசுகள் மற்றும் பெண்களையும் ஈர்த்து வருவது மறுக்க முடியாத உண்மையாகும்.

Continue Reading
To Top