Connect with us

Cinemapettai

முதல்வராக போகும் காயத்ரி ரகுராம்.. இணையத்தில் உலா வரும் தகவல்

gayathri-raguram

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதல்வராக போகும் காயத்ரி ரகுராம்.. இணையத்தில் உலா வரும் தகவல்

பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். நடிப்பைத் தாண்டி பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இவர் என்னதான் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருந்தாலும் ரசிகர்களுக்கு தெரியக் கூடிய அளவிற்கு பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான்.

இந்த நிகழ்ச்சி மூலம் காயத்ரி ரகுராம்மின் சுயரூபம் அனைவருக்கும் தெரிந்தது. அன்பு, கோபம் என அனைத்தையும் வெளிப்படுத்தி தனக்கென ஒரு குறிப்பிட்ட ரசிகர்களை பிக்பாஸ் மூலம் உருவாக்கிக் கொண்டார்.

gayathri-raguram

gayathri-raguram

சினிமாவை தாண்டி அரசியல் களத்திலும் குதித்த காயத்ரி ரகுராம் பெரிய அளவில் அரசியல் வெற்றி பெறமுடியாமல் பல பேச்சுகளுக்கும், கிண்டலுக்கும் ஆளானார்.

தற்போது சமூக வலைதளத்தில் காயத்ரி ரகுராம் ஒரு படத்தில் முதல்வராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் எனவும் அந்த படம் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக உள்ள புதுப்பேட்டை-2 பாகம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top