Connect with us
Cinemapettai

Cinemapettai

தேவேந்திரகுல வேளாளர் – உள்ளிட்ட 7 உட்பிரிவு ஜாதிகளும், பட்டியலினத்தவர் சலுகை! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர்!

Tamil Nadu | தமிழ் நாடு

தேவேந்திரகுல வேளாளர் – உள்ளிட்ட 7 உட்பிரிவு ஜாதிகளும், பட்டியலினத்தவர் சலுகை! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர்!

தமிழக முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள்.

அதில் ஒன்றாக தற்போது பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் தேவேந்திரகுல வேளாளர் என்ற பொது பெயரின் கீழ் உள்ள பள்ளர், காலாடி, குடும்பர், வாதிரியான், பண்ணாடி,  கடையன், தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட உட்பிரிவு சாதிகளுக்கும் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த கோரிக்கையானது, நீண்ட நாட்களாக இந்த சமுதாயத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள் போன்றவை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

ஆகையால் இந்தக் கோரிக்கையை ஆய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையிலான ஒரு குழு தமிழக அரசு உத்தரவின் பெயரில் ஆய்வு நடத்தியது.

எனவே அந்த ஆய்வறிக்கையின் முடிவில் அடிப்படையில் மாநில பட்டியலினத்தில் உள்ள பள்ளர், காலாடி, குடும்பர், வாதிரியான், பண்ணாடி,  கடையன், தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட உட்பிரிவு சாதிகளை இணைத்து ‘தேவேந்திரகுல வேளாளர்’ என்று அழைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

ஆகையால் மக்களும் அரசியல் கட்சியினரும் நீண்ட நாட்களாக வைத்த கோரிக்கையை துரிதமாக நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு பல தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top