ஒரு ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடிக்க ஒன்பதுதாராவுக்கு பல கோடிகள் சம்பளம் பேசப்பட்டுள்ளது. அவரும் ஒப்புக் கொண்டு விட்டதாக தகவல். இவ்வளவு பெரிய சம்பளத்துக்கு காரணம் அவர் நடிக்க வேண்டியது அந்த ஜவுளி கடையின் உரிமையாளருடன்.

இருவரும் இணைந்து நடிக்கும் விளம்பர படத்தை பிரபலமான அந்த இரட்டை இயக்குனர்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் படமாக்க இருக்கிறார்கள். விளம்பரங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இருவரும் இணைந்து சினிமாவில் நடிக்கலாம் என்கிறார்கள். இருவரும் நடிப்பதற்கான கதையையும் ஜெர்ரி பழத்தின் பெயர் கொண்ட இரட்டை இயக்குனர்கள் தயாராக வைத்திருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது.