சென்ற ஆண்டு தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் தலா இரு படங்கள் வெளியாகின. இதில் தனுஷ் நடிப்பில் வெளியான இரு படங்களில் ஒன்று சுமாரான வெற்றியும் மற்றொன்று சராசரியான வெற்றியும் பெற்றன. ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான இரண்டு படங்களுமே மக்களிடம் நல்ல வசூலை பெற்று பாக்ஸ் ஆபீசில் இடம் பிடித்தன.

இந்நிலையில் இவர்கள் இருவரும் வெள்ளித்திரையில் மோதியது போல்…கூடிய விரைவில் சின்னத்திரையிலும் மோத போகிறார்கள். ஆம் பொங்கல் விருந்தாக ஜெயா தொலைக்காட்சியில் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படமும்… தனுஷ் நடிப்பில் வெளியான தொடரி படமும் திரையிடப்படுகிறது.