அஜித் பட வாய்ப்பை உதறித் தள்ளிய சேது பட அபிதா குஜலாம்பாள்.. சீரியலுக்கு தள்ளப்பட்ட சோகம்!

2011ஆம் ஆண்டு சரவண சுப்பையா இயக்கத்தில் அஜித் குமார், மீனா, வசுந்தரா தாஸ், நக்மா போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் சிட்டிசன். அன்றைய காலகட்டத்தில் இருந்த அரசியலை தத்துரூபமாக வெளிக்கொண்டு வந்த கதை.

இதில் அப்பா, மகன் கதாபாத்திரத்தில் அஜித்குமார் நடித்திருப்பார். ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது சிட்டிசன் திரைப்படம்.

இந்தப்படத்தில் இளம் வயது அஜித்திற்கு ஜோடியாக வசுந்தர தாஸ் நடித்திருப்பர். அப்பாவுக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். மீனவப் பெண்ணாக நடித்த மீனாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த கதாபாத்திரம் முதன் முதலில் மீனாவுக்கு பதிலாக சேது படத்தில் நடித்த அபி தான் நடிக்க இருந்தாராம். ஆனால் அபி நடிக்க மறுத்து விட்டாராம், தற்போது வரை இதற்காக வருத்தப்பட்டு வருகிறார். நல்ல வேலை நடிக்க வில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அபிதா சேது படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக அபிதா குஜலாம்பாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாலா இந்த கதாபாத்திரத்தை மிக அற்புதமாக கையாண்டிருப்பார், மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

thirumathi-selvam
thirumathi-selvam

தற்போது இந்த அபிதா திருமதி செல்வம் என்ற சீரியலில் தளபதி விஜய்யின் நண்பனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார், நல்ல பட வாய்ப்பை இழந்து விட்டதால் தற்போது வரை சீரியலில் நடித்து வருகிறார் அபிதா.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்