நல்ல கலைஞர்கள், திறமைசாலிகள், அபார கவிஞர்கள் இப்படி நாம் யாரை எல்லாம் கொண்டாடுகிறோமோ அவர்களை கால தேவன் விரைவாய் அழைத்துக் கொள்கிறான்.

அதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தால் எங்கு சுற்றினாலும் மது என்கிற ஒரு மிருகம் காரணமாகிவிடுகிறது.

சினிமா உலகில் மட்டும் தான் எல்லாம் பைசா செலவு இல்லாமல் வந்து குவியும். அது மதுவோ, மாதுவோ. இதில் வேண்டாம் என்று வெறுப்பவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர்.

அந்த வலையில் சிக்கியவர்கள் அதில் இருந்து மீள முடியாமல் மாண்டு போகிறார்கள். அபாரக் கவிஞன் முத்துக்குமாரை இளம் வயதில் காவு வாங்கியது மது என்றார்கள்.

அதிகம் படித்தவை:  விஜய் 60 வது பட தலைப்பு பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு

அவரிடம் சீக்கிரம் வேலை வாங்க மதுவால் குளிப்பாட்டி மீள விடாமல் இறுதியில் தீக்கு இரையாக்கினார்கள், சில சுயநலவாதிகள்.

இன்னும் பல கலைஞர்கள் நமக்கு காரணங்களே தெரியாமல் இறந்து போகிறார்கள். அந்த வரிசையில் நம்மை எல்லாம் சிரிப்பு அலையில் ஆழ்த்திய மகா கலைஞன் சிட்டி பாபு.

மிக இளம் வயதில் அதிக அளவில் சர்க்கரை நோய் தாக்கி மயங்கி விழுந்தார்.  அரி கிரி அசம்பிளி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிட்டி பாபு, அதையடுத்து தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, மாப்பிள்ளை, தசாவதாரம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களிலும், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்தார்.

அதிகம் படித்தவை:  வெளியானது அனுஷ்கா சர்மா தயாரித்து நடிக்கும் திகில் படமான 'பாரி' டீஸர் !

மிக வேகமாக உயர்ந்த இடத்தைப் பிடித்து வந்தார். இந்த நிலையில்  இவருக்கு ஏற்கனவே இருதய கோளாறு இருந்தது.

இதற்காக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிட்டி பாபு, திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு இரண்டு வருடங்கள் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

பிறகு மீண்டும் நடிக்க தொடங்கிய அவர் சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் உபாதை அதிகம் ஆகித்தான் மயங்கிச் சரிந்தார்.

இந்த இளம் வயதில் இவரின் உடம்புக்குள் ஏன் இவ்வளவு பிரச்சனைகள்…!

இறைவன்    ஒருவனுக்குத் தான் தெரியும்..!