Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரவி சொன்ன மாதிரி மனோஜ் கேட்ட ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொடுக்க தயாராகி விட்டார். ஆனால் ஒரு லட்ச ரூபாய்க்கு எனக்கு மாசம் மாசம் 3000 வட்டி வேண்டும் என்று ரோகினிடம் கரராக சொல்லிவிட்டார். ரோகிணியும் இதைத் தவிர வேறு வழியில்லாததால், என் தோழியிடம் சொல்லி நான் உனக்கு வட்டி பணத்தை மாசம் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி மனோஜிடம் பணத்தை வாங்கி விடுகிறார்.
அடுத்ததாக ஷோரூம் வந்த ரோகிணியின் தோழி வித்யா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லை உடனே ஆபரேஷன் பண்ண வேண்டும் என்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ரோகினிடம் சென்டிமென்டாக பேசுகிறார். இதை கவனித்த மனோஜ், வித்யாவின் இக்கட்டான சூழ்நிலைக்கு நாம் பணம் கொடுத்து உதவ வேண்டும். அதனால் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை நான் கொடுக்கிறேன் என்று சொல்லி வித்யாவிற்கு மனோஜ் பணம் கொடுக்கிறார்.
லோக்கல் ரவுடி இடம் கூட்டணி வைக்கப் போகும் ரோகினி
இந்த பணத்தை மனோஜிடம் வாங்கிய வித்யா, நன்றி சொல்லிவிட்டு வெளியே கிளம்பி விடுகிறார். அதே மாதிரி ரோகினி ஒரு லட்ச ரூபாய் பணத்தை வாங்கிட்டு வெளியே போய் விடுகிறார். பிறகு இருவரும் சிரித்து மனோஜை ஏமாற்றிய விஷயம் தெரிய வருகிறது. அதாவது மனோஜிடமிருந்து பணத்தை பறிப்பதற்காக வித்தியா பொய் சொல்லி பணத்தை வாங்குவதற்கு ரோகிணி ஐடியா கொடுத்திருக்கிறார்.
அதன்படி மனோஜும் இவர்கள் நடிப்பில் ஏமாந்து பணத்தை கொடுத்து விட்டார். ஆக மொத்தத்தில் ரோகினிக்கு தேவையான பணம் கிடைத்து விட்டது. அடுத்ததாக முத்து அவருக்கு தெரிந்தவரிடம் வட்டிக்கு ஒரு லட்ச ரூபாய் பணத்தை வாங்கிட்டு நண்பரிடம் கொடுக்க கார் செட்டுக்கு போகிறார். ஆனால் முத்துவின் நண்பர் எனக்கு வேண்டாம். ஆடம்பரமாக செலவு செய்ய எனக்கு விருப்பமில்லை.
என் வருமானத்திற்கு ஏற்ற மாதிரி நான் பார்த்து செலவு பண்ணுகிறேன் என்று முத்துவிடம் சொல்கிறார். இதை கேட்ட முத்து ஏதோ ஒரு விஷயம் நடந்திருக்கிறது என்று நண்பரிடம் என்ன ஆச்சு யார் என்ன சொன்னார் என்று கேட்கிறார். இதற்கிடையில் மீனா, முத்துவின் நண்பரை சந்தித்து ஆடம்பரமாக செலவு செய்தால் நீங்கள் தான் குடும்பத்துடன் கஷ்டப்படுற மாதிரி ஒரு சூழ்நிலை வரும்.
அதனால் இருக்கிறதை வைத்து சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று அட்வைஸ் செய்துவிட்டு போனார். இதனால் தான் முத்து பணம் கொடுக்கும் பொழுது நண்பர் வாங்க மறுத்து விடுகிறார். இந்த விஷயம் முத்துவுக்கு தெரியவரும் பொழுது மீனாவிடம் சண்டை போட வாய்ப்பு இருக்கிறது. இதனை தொடர்ந்து ரோகிணி, மனோஜை பிளாக்மெயில் பண்ணும் விஷயத்தை லோக்கல் ரவுடி சிட்டி இடம் சொல்லி ஜெயிலுக்குள் இருக்கும் பிளாக் மெயில் நபரை வார்னிங் கொடுக்க சொல்கிறார்.
அதே மாதிரி லோக்கல் ரவுடி சிட்டியும், உங்களை பிளாக்மெயில் பண்ணும் நபரை நான் பார்த்துக் கொள்கிறேன். இனி உங்கள் விஷயத்தில் தலையிடாதபடி நான் என்ன பண்ணனுமோ அதை செய்கிறேன். ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் எனக்கு ஒரு விஷயம் செய்ய வேண்டும் என்று கேட்கிறார். உடனே ரோகிணி என்ன செய்யணும் என்று கேட்கும் பொழுது முத்துவிடம் உங்க மாமியாரிடமிருந்து பணத்தை பறித்து விட்டுப் போன நபரின் வீடியோ இருக்கிறது.
அந்த வீடியோ எனக்கு வேண்டும். அப்படி நீங்கள் அதை கொடுத்து விட்டீர்கள் என்றால் நீங்கள் கேட்டபடி பிளாக் மெயில் பண்ணும் நபரை நான் உங்கள் வழியில் தலையிடாதபடி பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். அதன்படி ரோகினியும் சரி என்று சொல்லிய நிலையில் லோக்கல் ரவுடி சிட்டி மற்றும் ரோகினி இருவரும் சேர்ந்து முத்துவை பகடைக்காயாக வைத்து மீனாவுக்கு குடைச்சல் கொடுப்பதற்கு பிளான் பண்ண போகிறார்கள்.
சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்
- முத்து கொடுத்த பணத்தை வேண்டாம்னு சொன்ன நண்பர்
- பண பிரச்சனையால் முத்துவிடம் சிக்க போகும் ரோகிணி
- மனோஜை பிளாக் மெயில் பண்ணும் நபரை கண்டுபிடித்த ரோகினி