Avan Ivan vishal Photos - moviegalleri.in

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவராக வெற்றி பெற்ற பின் விஷால் ஊடகங்கள் முன்பு பேசிய போது ‘தமிழ் ராக்கர்ஸ் – நீயா நானா பார்த்து விடுவோம்’ என சவால் விட்டார். ‘அரைக்கால் டவுசரில்’ வந்திருந்த ஞானவேல் ராஜா காவல்துறை உதவி இல்லாமலே பைரசியை ஒழிப்போம் என தொலைக்காட்சியில் தொண்டை வலிக்கப் பேசினார்.

இவர்கள் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு வரை தமிழ் ராக்கர்ஸ் ஒரு நாள் தாமதமாகவே தமிழ் படங்களை இணையத்தில் திருட்டுத் தனமாக வெளியிட்டு வந்தனர். இவர்களின் சபதங்கள், சவால்களைக் கேட்ட பிறகு இந்தியாவில் காலைக் காட்சி தொடங்கும் முன்பே அதிகாலை நேரத்தில் இணையத்தில் படத்தை வெளியிடும் முடிவுக்கு வந்தனர். பாகுபலி – 2 ஏப்ரல் 28 அன்று இந்தியா முழுவதும் காலை 10.30 மணிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் ராக்கர்ஸ் காலை 5.45 மணிக்கே இணையத்தில் முழுப்படமும் வெளியிட்டது.

விஷால் விடுத்த சவால், ஞானவேல்ராஜா பொது வெளியில் நாலாந்தரமான வார்த்தைகளில் தமிழ் ராக்கர்சை திட்டியதற்கான பதிலடிதான் இச்செயல் என்கின்றனர் தமிழ் ராக்கர்ஸ் பற்றி அறிந்த இணையவாசிகள்.

அதிகம் படித்தவை:  சசிகலா - ஜெயலலிதா இரகசிய வீடியோ லீக்

இணையத்தில் படம் வெளியாவதைத் தடுக்கும் அதிகாரம் மத்திய அரசு சம்பந்தபட்டது. மாநில காவல்துறை இதில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். GST வரி விதிப்புக்கு எதிராக மத்திய அரசிடம் புகார் மனு எதுவும் கொடுக்காமல் தன்னிச்சையாக வேலை நிறுத்தத்தை அறிவித்து, மத்திய அரசுடன் மோதல் போக்கைத் தொடங்கி உள்ளார் விஷால். இதனால் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் ஆகிய அமைப்புகளை மத்திய பி.ஜே.பி அரசு பழிவாங்க உரிய நேரத்துக்காக காத்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருட்டு டிவிடி, இணைய தளத்தில் படம் வெளியாவதை ஒழிப்பது சம்பந்தமாக தேர்தலில் பேசியதோடு சரி. வேறு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் தேவையற்ற விமர்சனங்கள் வருவதைத் தவிர்க்க நேற்று (7.05.2016) அவசரமாக சென்னை நகர் காவல் துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.

ரோட்டோர கை ஏந்தி பவனுக்கு சாப்பிடப் போனாலே மீடியாக்களுக்கு தகவல் சொல்லிவிட்டு புறப்படும் விஷால், பாகுபலி – 2 ஏப்ரல் 28 அன்று இணையத்தில் வெளியானதற்கு நடவடிக்கை எடுக்க கோரி 2017 மே 7ம் தேதி புகார் கொடுக்க போனவர் ஊடகங்களைச் சந்திப்பதை தவிர்க்க கமிஷனர் அலுவலக பின்பக்க வழியாக தப்பிக்கப் பார்த்த வரை விரட்டி சென்று ஊடகங்கள் கேள்வி கேட்டன.

அதிகம் படித்தவை:  விளம்பர படத்தில் நடித்த காரணத்தை முதல் முறையாக கூறிய கமல்

வேறு எந்த தமிழ் படங்களுக்காகவும் சங்க தலைவராக கமிஷனரிடம் புகார் கொடுக்க போகாத விஷால் பாகுபலிக்காக போனது ஏன்? என்று கேட்கின்றனர் தமிழ் படத் தயாரிப்பாளர்கள். ‘மொழிப் பாசத்துக்கே ஒரு வாரம் தாமதமாக புகார் கொடுக்க போகும் தலைவர் விஷால் தமிழ் படங்களுக்கு, ஒரு மாதம் கழித்து புகார் கொடுக்க போவாரோ’ என்று கடுப்புடன் கேட்கின்றனர் சிறுபட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைத் துறையினர்.

“மத்திய அரசிடம் அமைப்பு ரீதியாக இணக்கமாகப் பேசி இணையத் திருட்டை தடுக்க முடியும். மாநில அரசுடன் சுமுகமான உறவைக் கடைப்பிடித்து அனைத்து தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து மனு கொடுத்தால் திருட்டு டிவிடி ஒழிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதனை செயல்படுத்துவதை விட்டுவிட்டு, பந்தாவுக்காக மீடியாவில், சவால் விடுவதற்கு இது சினிமா படமல்ல,” என்கிறார்கள் பிரபல தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும்.