Tamil Cinema News | சினிமா செய்திகள்
சினிமா ஆசை, சீரழிக்கப்படும் 11 வயது சிறுமிகள், பாலியல் தொழில் ,நெஞ்சை நொறுக்கும் புகைப்படங்கள்!
விபச்சாரம், இந்த வார்த்தையை கேட்டாலே, சிலருக்கு வெறுப்பு தான் வரும். இது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாக தான் பார்க்கப்படுகிறது.
ஆனால், பெரும்பாலானோருக்கு தெரியாது சில நாடுகளில், இது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழில் என்று. குறிப்பாக தன்கேய்ல் மாவட்டத்தின், கண்டப்பரா பகுதி தான் மிகவும் பிரபலம்.
இதுகுறித்து, உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்காக ஜெர்மன் நாட்டை சேர்ந்த புகைப்பட கலைஞர் சாண்ட்ரா ஹாய்ன், தன்கேய்ல் மாவட்டத்திற்கு பயணித்து, அங்குள்ள பெண்களிடம் அவர்கள் வாழ்க்கை குறித்து கேட்டறிந்து, சில புகைப்படங்களையும் வெளியிட்டார்.
11 வயது முதல் 15 வயது சிறுமிகளாக இருக்கும் போதே பெண்கள் இத்தொழிலில் ஈடுப்படுகின்றனர். சிலர் குடும்ப கஷ்டத்திற்காக இதை செய்யும் போது, ஒரு சிலர் சினிமா ஆசையில் ஊரை விட்டு ஓடு வந்து, தெரியாதவர்களிடம் மாட்டிக்கொண்டு வலுக்கட்டாயமாக இதில் ஈடுப்படுத்தப்படுகின்றனர்.
நாள் ஒன்றுக்கு 1000 முதல் 2000 வரை சம்பாதிக்கும் இந்த பெண்கள், இதில் ஈடுவடுவதே அவர்களின் கனவுகளை நினைவாக்க தான். இத்தொழிலில் ஈடுப்படும் 70 % பெண்களுக்கு, குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், சொந்தமாக வீடு ஒன்றை வாங்க வேண்டும் என பல கனவுகள் உள்ளது.
ஆனால், இதில் கொடுமை என்னவென்றால், அவர்கள் யாருக்காக இதை செய்கிறார்களோ அவர்களை கூட சென்று பார்க்க முடியாமல், தூரத்தில் இருந்தே அனைத்தையும் செய்கிறார்கள். மேலும், இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் அதே இடத்தில் வளர்க்கப்பட்டு, பின்னர் அதே தொழிலில் ஈடுப்படுத்தப்படுகின்றனர்.
இப்படி உடல் அளவிலும், மனதளவிலும் காயப்படும் இந்த பெண்களுக்கு, இந்த அடிமை வாழ்க்கையில் இருந்து விடுதலையே இல்லையா. இவர்களும் மரியாதையான ஒரு வாழ்க்கையை வாழ முடியாத என பல கேள்விகள் எழுகின்றன. ஆனால், இதற்கு பதில் யாரிடம் உள்ளது?
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
