தெலுங்கில் பெரிய ஹீரோ வீட்டு வாரிசை காதலித்து அந்த குடும்பத்துக்கு மருமகளாக செல்லவிருக்கும் நடிகையை ஆச்சர்யமாக பார்க்கிறது கோலிவுட்டும் டோலிவுட்டும். அந்த குடும்பத்தில் மூத்த நடிகரை எல்லோரும் மரியாதையாக பார்ப்பார்கள்.

இரண்டாவது மகனுக்கு பார்த்திருந்த பெண் இந்தக் குடும்பத்தின் கட்டுப்பாட்டை மதிக்கவில்லை என்பதால் அந்த திருமணத்தையே கேன்சல் செய்துவிட்டனர்.

ஆனால் இந்த நடிகையோ அதற்கெல்லாம் அசந்த மாதிரி தெரியவில்லை. அக்டோபரில் திருமணம் என்று திட்டமிட்டிருக்கும் நிலையில் கமிட் செய்த படங்களை நடித்துக்கொடுத்துவிட்டுத்தான் வருவேன் என்று கண்டிஷனாக சொல்லிவிட்டாராம்.

சிவ நடிகரின் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை விட்டுக்கொடுப்பதாக இல்லையாம் நடிகை. அதோடு படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதற்கும் நடிகை நோ சொல்வதில்லையாம். இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்களில் சிலவற்றில் நெருக்கமாகவும் கிளாமராகவும் கூட நடிக்கிறாராம்.