இன்றைய சினிமா பேட்டை ஸ்னாக்ஸ் கார்னர்ல குட்டி குட்டி சுவாரஸ்யமான செய்திகளை பாப்போம் வாங்க.

ராஜ மௌலியின் அடுத்த திரைப்படத்தில் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் ஹீரோவாக நடிக்க உள்ளார்

த்ருஷ்யம் திரைப்படம் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அங்கு வெளியாக தயாராகிவருகிறது.

Wonder Women படத்தின் இயக்குனரான Patty Jenkins அதன் இரண்டாம் பாகத்திற்கு பெரும் தொகையை சம்பளமாக வாங்கி உலகிலேயே அதிக சம்பளம் பெற்ற இயக்குனர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிக்கும் ஷில்பா படத்தில் மிஷ்கின் மற்றும் நலன் குமாரசாமி கோ டைரக்டராக பணி புரிகிறார்கள்.

ஸ்பைடர் படத்தினை தொடர்ந்து போகன் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் வில்லனாக நடிக்கவிருக்கிறார் S.J. சூர்யா

இயக்குனர் கோகுல் நம் விஜய் சேதுபதியை வைத்து 20 கோடி பட்ஜெட்டில் ஜுங்கா படத்தை எடுக்க உள்ளார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: கோகுல் இன்னொரு காஷ்மோராவ தாங்கிக்க எங்களுக்கு சக்தி இல்லை. அதனால ப்ளீஸ் நல்ல படமா எடுங்க.