சினிமாபேட்டை மிக்ஸர்ல கோலிவுட் தவிர மற்ற சினி இண்டஸ்ட்ரில என்னென்ன செய்திகள்னு பார்க்க போறோம்ங்க. உள்ளே ஜாவோ

  • நம்ம மோகன்லால் ஷூட்டிங் ஸ்போட்ல ஒரு சோக காட்சி எடுத்திட்டு இருக்கும்போது அந்த காட்சிக்கு தத்ரூபமா அழுதுட்டு இருந்திருக்காருங்க… காட்சி முடிஞ்சு இயக்குனர் கட் சொன்ன பிறகும் மோகன்லால் அழுகைய நிறுத்தவே இல்லையாம்… அந்த அளவு காட்சியோட ஒன்றி நடிச்சிருக்காராம்.
  • ரீமேக்னாலே ஹிந்தில அஜய் தேவ்கானை அடிச்சுக்க ஆள் இல்லைங்க… இப்போ பாகுபலியை காப்பியடித்து உருவாகப் போகும் ஒரு படத்துல நம்ம அஜய் நடிக்கப் போறதா கிசு கிசு வந்திருக்கு
  • மலையாளத்துல அறிமுகமான நடிகை அனு இமானுவேல் போன வருடம் மஜ்னுனு ஒரு தெலுங்கு படத்துல நடிச்சு அந்த படமும் பெருவெற்றி பெற்றுச்சு.. இப்போ அவுங்க நா பேரு சூர்யாங்கிற படத்துல நடிச்சுட்டு இருக்காங்க.. இந்த படத்துல அல்லு அர்ஜுன் ஹீரோ, அது மட்டும் இல்லாமல் நம்ம ஆக்சன் கிங் அர்ஜுன், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இவுங்களும் நடிக்கிறாங்கலாம்… நடிகை அனு தமிழ்ல துப்பறிவாளன் படத்துல நடிச்சுருக்காங்க….
  • பாபநாசம்ல நடிச்ச நிவேதா தாமஸ் ஞாபகம் இருக்கா? அவுங்க இப்போ தெலுங்குல பெரிய ஹீரோயின் ஆகிட்டாங்க… நானி கூட இவுங்க நடிச்ச ஜென்டில் மேன் மற்றும் நின்னுக்கோரி பெரு வெற்றி பெற்றதை தொடர்ந்து மூன்றாவது முறையா நானி கூட ஒரு படம் நடிக்க போறாங்களாம்… இப்போ இவுங்க ஜூனியர் NTR கூட நடிச்சுட்டு வருகிற லவ குசா SEP 21ம் தேதி ரிலீஸ் ஆகும்னு எதிர்பார்க்கப்படுது.
  • நம்ம sylvester stallone நடிப்புல வெளியான ராம்போ சீரிஸ் படங்களை அவ்வளவு சீக்கிரமா மறந்திட முடியாது… இப்போ இவரோட First Blood படத்தை ரீமேக் செஞ்சு அதுல டைகர் ஷெராப் நடிக்கப் போறாராம்.. இதுல sylvester stallone ஒரு கௌரவ தோற்றத்துல வருவார்னு வெளியான செய்தி பொய்னு அந்த திரைப்படக்குழு சொல்லிருக்காங்க…