சினிமாபேட்டை கொத்து பரோட்டா! இவர்களெல்லாம் என்ன பண்றாங்க தெரியுமா?

நம்ம சினிமா பேட்டை கொத்து பரோட்டா பதிவுக்கு உங்களை வரவேற்கிறோம். இன்று நம்ம கொத்து பரோட்டால எது சம்பந்தமான சினிமா செய்திகளை பார்க்க போறோம்னா “இந்த நியூசை எல்லாம் யாருடா உங்கள்ட கேட்டது?”னு உங்க மனசுல கேள்வி எழுப்பக்கூடிய செய்திகளை பார்க்க போறோம்.

அழகன் படத்தில் குழந்தை நட்சத்திரமா அறிமுகமான நம்ம டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் “அராத்து”னு ஒரு படத்துல ஹீரோவா நடிக்குறாரு. அதுல தல அஜித் மாதிரி சால்ட் அண்ட் பெப்பர் கெட் அப்ல வருகிறார்.

பிரியங்கா திரிவேதி அதாங்க நம்ம சியான் விக்ரமோட காதல் சடுகுகுனு ஒரு படத்துல நடிச்சாங்களே அவுங்க இப்போ ஹவ்ரா பிரிட்ஜ்னு ஒரு தமிழ், கன்னட பைலிங்குவல் கிரைம் படத்துல நடிக்குறாங்க.

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்னு ஒரு படம் இந்த படத்துல விஜய் தொலைகாட்சி சீரியலில் (காதலிக்க நேரமில்லை) நடித்த பிரஜின் ஹீரோவா நடிக்கிறார். இது ஒரு முழு நீள காமெடி படமாம்.

கிருஷ்ணம் என்கிற ஒரு படத்தில் புது முகங்கள் ஹீரோ ஹீரோயினாக நடிக்குறாங்க. இந்த படத்தோட ஸ்பெஷல் என்னானா உலக சினிமாவில் முதன் முறையாக அப்டின்னு போஸ்டர்ல போட்ருக்காங்க… ஆனா என்னான்னு சொல்லாமல் சஸ்பென்ஸா வைச்சுருக்காங்க…

அறிமுக இயக்குனர் ஜெயப்ரகாஷ் இயக்கத்தில் விண்வெளி பயணக்குறிப்புகள்னு ஒரு படம் வருது. இதோட ஹீரோ அத்விக் ஜலந்தர். இந்த படத்தோட first லுக்ல Non Linear, Science Fiction, Cellular Taleனு போட்ருக்காங்க. யாருக்காவது இதுக்கு அர்த்தம் புரிஞ்சா கீழ கமெண்ட்ல சொலுங்க…

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: பாவம், நாமலே இந்த நியூஸ் எல்லாம் போடாட்டி வேற யார் போடுவாங்க.

Comments

comments