இன்றைய சினிமா பேட்டை காராபூந்தில நாம கார சார ஒரு வரி சினிமா செய்திகளை கொறிக்கப் போறோம்க. எல்லாரும் ரெடியா? சரி என்னென்ன தேதில என்னென்ன நடக்கப் போகுதுன்னு பார்ப்போம்.

Vivegam-Mersalவிவேகம் படத்தோட ரிலீஸ் தள்ளிப்போகலை கட்டாயம் படம் ஆகஸ்ட் 10 அன்று வெளிவருது.

மெர்சல் பட ஷூட்டிங் ஜூலை 31 உடன் முடிவடைகிறது. தீபாவளி அன்று படம் திரையட திட்டம்.

sivakarthikeyan velaikaranசிவகார்த்திகேயன் நடிச்சுட்டு இருக்க வேலைக்காரன் படத்தோட ஆடியோ ரிலீஸ் அடுத்த மாதம் நடக்க உள்ளது. இசை அனிருத்

நடிகர் சங்க கட்டிடம் 2018 ஆகஸ்ட் மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது

அர்ஜுனின் 150வது படமான நிபுணன் நாளை வெளியாகப்போகுது

இயக்குனர் ராம் இயக்கத்துல எடுக்கப்பட்ட தரமணி திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி திரைக்கு வருகிறது.

மேலும் நாளை கூட்டத்தில் ஒருத்தன், ஏன் இந்த மயக்கம் போன்ற திரைபடங்க வெளிவர உள்ளன.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: நாங்க கண்ண மூடுறதுக்குள்ள யாராவது 2.0 & விஸ்வரூபம் 2 படத்தோட ரிலீஸ் தேதியாவது சொல்லிருங்கப்பா.