sundar-c-story_

ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி போன்ற எத்தனை வரி வந்தாலும் சினிமா அழியாது என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்தார்.

ஹிப் ஹாப் ஆதி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘மீசையமுறுக்கு’ படத்துக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து படம் வெற்றியடைந்தது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. இதில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள்.

இதில் தயாரிப்பாளர் சுந்தர்.சி பேசியதாவது:

இப்படம் ஏ, பி மற்றும் சி உள்ளிட்ட அனைத்து இடங்களில் எதிர்பாராத வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். ஆனால் யு-டியூப்பில் வீடியோ செய்பவர்கள் சினிமாவுக்கு சரியாக இருக்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். அப்படி சொன்னவர்கள் அனைவரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு வெற்றி பெற்றுருப்பதில் சந்தோஷமாக இருக்கிறது.

அதிகம் படித்தவை:  சிம்பு படத்தில் இரண்டவது ஹீரோவாக நடிக்கிறாரா மகத் ? வைரலாகுது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ.

Director_Sundar_C_Copied-Movies_Onlyமுதல் நாளை விட தற்போது திரையரங்குகள் கணிசமாக உயர்ந்திருக்கிறது. கேரளாவில் திரையரங்கே தராமல் இருந்தார்கள். தற்போது அழைத்து திரையரங்கு தருகிறார்கள். நான் நிறைய படங்கள் தயாரித்திருக்கிறேன், இயக்கியுள்ளேன். ஆனால், இப்படம் போன்ற ஒரு மகத்தான வெற்றியை சந்தித்ததே இல்லை.

அதிகம் படித்தவை:  பணம் கேட்ட நடிகர்...!!!அடியாட்களை வைத்து மிரட்டிய இயக்குனர் சுந்தர்.சி

meesaya murukku boxofficeஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி போன்ற பிரச்சினைகளால் மக்கள் திரையரங்கிற்கு வரவில்லை. மக்கள் கூட்டம் மிகவும் குறைவாகவுள்ளது. இனிமே சினிமாவின் நிலை என்னவாகும் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால், இன்றைக்கு ‘மீசையமுறுக்கு’ மற்றும் ‘விக்ரம் வேதா’ இரண்டு படங்களுக்குமே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. நல்ல படம் கொடுத்தால், எவ்வளவு பணம் கொடுத்தானாலும் பார்ப்போம் என்று நிரூபித்திருக்கிறார்கள். எத்தனை வரி வந்தாலும் சினிமா அழியாது.

இவ்வாறு சுந்தர்.சி தெரிவித்தார்.