Connect with us
Cinemapettai

Cinemapettai

simbu-vishal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காசுன்னா, சினிமா தமிழன் அடங்கிடுவானா, என்ன கொடுமை சார் இது?

நடிகர் விஷால் நடிகர் சங்க தேர்தலில் அணி சேர்த்துக்கொண்டு நிற்கும்போது, அதை எதிர்த்து நின்ன சரத்குமாருக்கு ஆதரவாக களம் இறங்கியவர் சிம்பு. அப்போது, தெலுங்கர் விஷால் ரெட்டி , தென்னிந்திய நடிகர் சங்கத்தை ஆட்டிப்படைப்பதா ? என்றெல்லாம் பதிவுகள் வந்தன.

அதன்பின், சிம்பு அடுத்தடுத்து தமிழர்களின் நாயகனாக இருக்க, ஜல்லிக்கட்டு விவகாரம் உதவியது. அதிலும், விஷால் பீட்டா உறுப்பினர் என்று தமிழக இளைஞர்களால் விமர்சிக்கப்பட்டார்.

அடுத்து , தயரிப்பாளர் சங்கம் என்பது சினிமா பிசினஸின் முக்கிய புள்ளி. அதை கைப்பற்ற திட்டம் தீட்டிய விஷால், ஜெயித்து வந்த நடிகர் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்துட்டு, தேர்தலில் நிற்பேன் என்று சொன்னார்.

ஆனால், அதற்குள் என்ன ஆனதோ, தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் போஸ்டுக்கு சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர் நிற்கப்போகிறார் என்றும், அவர் எதிர்த்து விஷால் சார்பாக குஷ்பு நிற்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இப்போ, டி. ராஜேந்தரும் நிற்கலை. குஷ்புவும் நிற்கலை. விஷால் தலைவருக்கு நிற்க, விஷால் தேர்தல் மனுவில் முன் மொழியும் கையெழுத்தை போட்டது கமல்ஹாசன்.

என்னப்பா ஆச்சு? என்றால், எல்லோரையும் கன்வின்ஸ் பண்ணிட்டு தான் விஷால் தேர்தலில் நிற்கிறாராம்.

‘காசுன்னா…சினிமா தமிழன் அடங்கிடுவானா? என்ன கொடுமை சார் இது?’ என்று கேள்வி கேட்டது சிம்பு தரப்பு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top