Connect with us
Cinemapettai

Cinemapettai

theater

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இழுத்து மூடப்பட்ட சினிமாத்துறை.! தயாரிப்பாளர் சங்கம் அதிரடி அறிவிப்பு.! இனி எந்த அறிவிப்பும் இல்லை

தமிழ் நாட்டில் நடக்கும் பல பிரச்சனைகளில் சினிமா பிரச்சனையும் ஓன்று ஆம் கடந்த மார்ச் 1 ல் இருந்து எந்த புது படமும் ரிலீஸ் ஆகவில்லை, கியூப் மற்றும் தியேட்டர்கள் அட்ராசிட்டி ஒழுங்கு படுத்துதல் திட்டத்தில் ஒரு ஸ்டெப் இல்லாமல் பல ஸ்டெப் முன்னேறி நிற்று அடித்து வருகிறது தயாரிப்பாளர் சங்கம். இதற்க்கு முன் விஷாலுக்கு எதிராக நிற்று கேம் ஆடிய பல தயாரிப்பாளர்கள் இப்பொழுது விஷாலுக்கு சப்போர்ட் செய்வதால் நினைத்ததை நடத்தி காட்டுவேன் என்ற நிலையில் புல் ஸ்பீட் காட்டி வருகிறார்.

theater

12.3.2018 அன்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க வளாகத்தில் நடைபெற்ற அனைத்து தயாரிப்பாளர்கள் சிறப்பு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின் படி வருகிற 16.3.2018 வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் தமிழ் மற்றும் பிற மாநில படபிடிப்புகள் நடத்துவதில்லை என்றும் 23.03.18 வெள்ளிகிழமை முதல் வெளியூர் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் நமது படபிடிப்புகளை நடத்துவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

16.3.2018 முதல் அனைத்து திரைப்படங்களின் எந்த ஒரு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெறாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஏற்க்கனவே தயாரிப்பாளர் சங்கத்தால் அறிவிக்கப்பட்ட புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்ற முடிவு தொடரும் என்பதையும், சினிமா சம்பந்தப்பட்ட இசை வெளியீடு டீசர் வெளியிடு போன்ற எந்தவித நிகழ்ச்சிகளும் நடைபெறாது என்றும் புதிய திரைப்படங்கள் சம்பந்தமாக எந்த ஒரு விளம்பரத்தையும் பத்திரிக்கையில் கொடுப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

cinema

cinema

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top