கோலிவுட்ல இப்போ நடக்கிற சில சுவாரஸ்ய செய்திகளை சினிமா பேட்டை சிப்ஸ்ல கலவையா பார்க்க போறோம்.

மிஸ்கின் இயக்கத்துல விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படத்தை பற்றி மிஸ்கின் பேசுகையில் இதுவரை நான் பார்த்த நடிகரிலேயே எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஷால் மட்டும்தான்னு சொல்லிருக்கரு. இந்த படத்துல கணியன் பூங்குன்றனார்ங்கிர பேர்ல விஷால் நடிக்கிறாராம்.

நான்காவது முறையா விஜய் சேதுபதி கூட காயத்ரி நடிக்க போறாங்களாம். படத்தின் பெயர் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்”. படமில்லாமல் தவிக்கும் காயத்ரிக்காக இந்த படத்துல விஜய் சேதுபதி சிபாரிசு செஞ்சாராம்.

சூரியோட நடிக்க மறுத்த நயன்தாரா இப்போ ஒரு புதுப்படத்துல யோகி பாபு கூட நடிக்க ஒத்துருக்காங்க. இந்த படம் முழுக்க நயன் கூட யோகி பாபு வருவாராம்.

தனது டாக்டரேட் பட்டத்திற்காக பல படங்களை வேண்டாம்னு சொன்ன சாய் பல்லவி இப்போ விஜய் சேதுபதி கூட ஒரு படத்துல நடிக்க வாய்ப்பிருக்குனு செய்தி வந்திருக்கு

ஜானி கத்தார் என்கிற ஹிந்தி படத்தை இப்போ தமிழ்ல எடுக்க போறாங்க. இதுல நம்ம ஜீன்ஸ் பிரஷாந்த் நடிக்க போறாராம், இவருக்கு ஜோடியா சஞ்சிதா செட்டி நடிக்க போறாங்க.

தெலுங்குல நாக சைத்தன்யாவிற்கு அம்மாவா நடிக்க ரேவதி ஒப்பந்தமாகிருக்காங்க… இனி தமிழ் படங்கள்லையும் அம்மாவா நடிப்பேன்னு சொல்லிருக்காங்க.