Tamil Cinema News | சினிமா செய்திகள்
படாதபாடுபட்டு நடித்த நடிகர்கள்.. ஆனால் கைகொடுக்காத திரைப்படங்கள்
சினிமாக்களில் என்னதான் நாம் படாதபாடுபட்டு நடித்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அந்த படம் தோல்வி தான். தன் உயிரையும் துணிச்சலாக வைத்து நடித்து அந்த படம் தோல்வி அடைந்தால் அந்த நடிகருக்கு ஏற்படும் மன உளைச்சல் கொஞ்சம் நஞ்சமல்ல. அப்படி நடித்து ஓடாத திரைப்படங்களை பார்ப்போம்.
முதலில் விக்ரம் நடிக்க ஷங்கர் இயக்கிய ஐ படம் தான். விக்ரம் இந்த திரைப்படத்திற்காக தன் உடலை எவ்வாறு மெலிந்துகொண்டார் என்பது தமிழ் நாட்டுக்கே தெரியும். அவர் அப்படி உடல் மெலிந்து அந்த மேக்கப் போட்டுக்கொண்டு எத்தனை கஷ்டப்பட்டு நடித்தாலும் படம் வசூல் வந்தாலும் விநியோகிஸ்தர்களுக்கு சுமார் ஆகிப்போனது. விக்ரம் பட்ட கஷ்டம் வீணாய் போனது.
கமலஹாசனின் ஆளவந்தான் நானே நடிகன் என்னை விட்டா யார் என அந்தப் படத்தில் மொத்தம் இரண்டு கதாபாத்திரத்தில் மேக்கப் போட்டுக்கொண்டு நடித்தார். ஆனால் அந்தப்படம் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் கை கொடுக்கவில்லை.
அடுத்ததாக ஷாம் நடித்த ஆறு மெழுகுவர்த்திகள் தன்னுடைய குழந்தையை கண்டுபிடிக்க அவர் படும்பாடு ரொம்ப அருமையாக எடுத்திருப்பார்கள். அந்த படத்திற்காக ஷாம் அவர்கள் பத்து நாட்கள் தூங்காமல் கண்களை விழித்துக் கொண்டே எந்நேரமும் இருந்தார். அந்த படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு நடித்தார். ஆனால் அந்த படம் ஓடவில்லை.
அடுத்ததாக இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அனுஷ்கா சுமார் 60 கிலோ எடையை கூட்டினார் ஆனால் அந்தப்படம் கைகொடுக்கவில்லை.
பரத்தின் ஐந்து ஐந்து ஐந்து இயக்குனர் சசி இயக்கத்தில் நடித்த பரத் இந்தப் படத்தின் கடைசி சண்டைக் காட்சிக்காக தன்னுடைய உடலை சிக்ஸ் பேக்ஸ் கொண்டுவர உடம்பை கட்டுக்கோப்பாக வைக்க அவர் படாதபாடு பட்டார். ஆனால் அந்தப் படம் சுமாராகத்தான் ஓடியது இன்னும் சில நடிகர்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.
நன்றி
குருநாத்
