Tamil Cinema News | சினிமா செய்திகள்
சினிமாவில் நம்மளை தியேட்டரை விட்டு ஓட வைத்த படங்கள்..
தமிழ் சினிமாவில் சில நேரங்களில் சில நடிகர்களின் படங்கள் நாம் பார்க்கும்போது நம்மளை தியேட்டரை விட்டு ஓட வைத்துவிடும். அப்படி நம்மளை ஓட வைத்த சில படங்களை பற்றி பார்ப்போம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பெரிதாக சொல்லிகொள்ளும் படியாக மோசமான படங்கள் வரவில்லை. அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்.
இரண்டாவது உலகநாயகன் கமல்ஹாசன் சமீபகாலமாக எந்தத் திரைப்படமும் வெளியிடவில்லை கடைசியாக உத்தமவில்லன் படம் மூலம்தான் நம்மை ஓட வைத்தார்.
அஜித் படம் என்றால் அவருடைய ஆழ்வார் படம் தான். அடுத்து விஜய் அவர்களின் படங்கள் எடுத்துக் கொண்டால் சுறா தான் நம்மளோட ஓட வைத்ததில் முதலிடம் பிடித்துள்ளது.
விக்ரமுக்கு சாமி 2 நம்பலை கதற கதற ஓட வைத்தது. சூர்யாவின் அஞ்சான் படம் தான் நம்மளை ஓட வைத்தது. தனுசுக்கு ஒரே பாட்டில் புகழ் பெற்ற படம் 3. ஒரே படத்தில் ஓடவைத்த படமும் மூன்று தான்.
சிம்புவை எடுத்துக்கொண்டால் சொல்லவே வேண்டாம் அவருடைய மோசமான படங்களில் AAA படம்தான். சிவகார்த்திகேயனுக்கு மிஸ்டர் லோக்கல், விஜய் சேதுபதிக்கு கருப்பன் படம் உள்ளன. அதில் எது உங்களை ஓட வைத்த படம் நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள்
