Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகர்களுக்கு மரண மாஸ் அந்தஸ்தை கொடுத்த படங்கள்..
தமிழ் சினிமா நடிகர்கள் எத்தனையோ தோல்விகளையும் எத்தனையோ வெற்றிகளையும் பார்த்துவிட்டனர். ஆனால் அவர்களுக்கு சினிமாவில் வாழ்க்கை அமைத்துக் கொடுத்த படங்களைப் பார்த்தால் அதில் முக்கியமான படங்கள் ஹீரோக்கு மாஸ் தரக்கூடிய படமாக இருக்கும்.
இந்த லிஸ்டில் முதலில் இருப்பது ஸ்டார்தான். ரஜினி எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் அவருக்கு முக்கியமான படம் பாட்ஷா. சூப்பர் ஸ்டாரின் மாஸ் படங்கள் என்றாலே நினைவுக்கு வருவதும் இந்த படம்தான்.
அடுத்தது உலகநாயகன், அவர் வாழ்வில் மறக்க முடியாத படம் பல இருந்தாலும் தேவர் மகன் தான் கமல் ரசிகர்கள் மறக்க முடியாத படம்.
அல்டிமேட் ஸ்டார் அஜித் பல படங்களில் நடித்தாலும் அவருக்கு ஸ்டார் அந்தஸ்தை கொடுத்த படம் பில்லா.
இன்று மாஸ் ஸ்டார் விஜய் அவர்களுக்கு முக்கியமான மாஸ் படம் கில்லி. எத்தனையோ ஆக்சன் படங்களில் நடித்திருந்தாலும் அன்று அந்த படம் தந்த வெற்றி இன்று வரை மாஸ் ஸ்டார் விஜய்யை சினிமாவில் நிலை நிறுத்தியுள்ளது .
அடுத்தது விக்ரம் சினிமாவில் 10 வருடங்களாக போராடி பார்த்தும் கிடைக்காத வெற்றி சேதுவில் கிடைத்தது. ஆனால் மாஸ் ஸ்டைல் எல்லாம் ஜெமினி படத்தில் கிடைத்தது. அவர் வாழ்வில் மறக்க முடியாத படங்கள அவை.
சூர்யாவுக்கு மாஸ் படம் என்றால் அது சிங்கம் தான்
சிம்புவுக்கு மாஸ் படம் என்றால் மன்மதன். அதன் மூலம்தான் பெரிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தனுசுக்கு மறக்க முடியாத படம் என்றால் காதல் கொண்டேன் படம்தான்
சிவகார்த்திகேயனுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கமும்
விஜய் சேதுபதிக்கு ‘சூது கவ்வும்’ படமும் உள்ளது
